பக்கம்:சிலம்புநெறி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி 67

ஆதலால், ஆழ்ந்த மெளனம் சாதிக்கிறான். கோவல னின் ஊழ்தன்னுடைய நினைப்பை நிறைவேற்றுதற்குரிய பிறிதொரு ஊழைக் கருவியாகக் கொண்டு காரியங்களை இயற்றுகிறது. சென்ற கால நிகழ்ச்சிகளை நினைத்து வருந்துதலை, தவிர்த்து, புதிய ஆள் வினையாற்றலைப் பெறும், நோக்கம், வந்திருக்குமானால், பொற்கொல்: லனை எதிர்த்துப் போராடியிருப்பான்; ஐயப்படும் காவல ருக்கு எடுத்துக் கூறியிருப்பான். ஏன் நாடாளும் அரசன் அவைக்கும் சென்று எடுத்துக் கூறவும் முடியும்.

கோவலனின் வாழ்க்கை அந்த திசையில் செல்ல வில்லை. சென்ற காலத் தவறுகளால் விளைந்த ஊழிற். குள்ளேயே அமிழ்ந்து விடுகிறான். அவனுக்கு ஊழினை எதிர்த்து நிற்கும் ஆற்றலில்லை. எழுந்து நடக்கும் ஆற்றலில்லாத சிங்கத்தை, சுண்டெலிகள் கூட, எதிர்த்து. வெற்றி கொள்ள முடியும் அல்லவா?

வாழ்கின்ற பொழுது சீராக, சிறப்பாக வாழ்தல் நன்றே. அறிந்தோ அறியாமலோ தவறுகள் நிகழ்ந்து: விடுமாயின், இழப்புகள் ஏற்பட்டு விடுமாயின், அதனை நினைத்துக் கவலைப்பட்டு என்ன பயன்? கறையான், மரத்தை, அரித்து அழிக்கும். கவலை, மனத்தை அரித்து அழிக்கும்.

தவறுகளை உணர்ந்து தவறுகள் நீங்கிய சிறப் புடைய வாழ்க்கை வாழ, அங்ங்ணம் வாழ்தலுக்குரிய களங் களை அமைக்க அடலேறுபோல, அயர் விலாத முயற்சி களை மேற்கொள்ளும் வாழ்க்கையே, வாழ்க்கை; அது: அறிவறிந்த ஆள்வினையுடைய வாழ்க்கை, ஊழையும்: உப்பக்கம் காணும் வாழ்க்கை; வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை. .

இந்த வாழும் நெறியை, கோவலன் கடைப் பிடிக்க . வில்லை. அதன் காரணமாகவே, அவனை, சராசரிப்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/69&oldid=702732" இலிருந்து மீள்விக்கப்பட்டது