பக்கம்:சிலம்புநெறி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பொற்கொல்லன் கூட, வெற்றி கொள்ள முடிந்தது. கோவலனின், ஆள்வினையிழந்த வாழ்க்கையின் தீயூழ், மன்னவனின் தீயூழோடு கூட்டுச் சேர முடிந்தது. முடிவு, கோவலன் கொல்லப்படுதலாகும்.

அவன், சென்ற கால ஊழின் காரணமாக கொல்லப் பட்டான் என்று கூறுவதில் தவறில்லை. ஆயினும், அந்த ஊழினை வெற்றி காணும் ஆகூழ்ப் படைக்க, கோவலன் முயன்றிருப்பானாகில் அவன் வெற்றி பெற்றிருப்பான்; வாழ்ந்திருப்பான்; பாண்டியனுக்கும் பெருமை சேர்த் திருப்பான்; நாட்டின் தீய சக்தியாகிய பொற்கொல்லன் ஒதுக்கப்பட்டிருப்பான்.

நல்லன சிந்தித்து, ஆற்றலோடு செயல்பட வேண்டி யவர்கள், அங்ங்ணம் வாழத் தவறுவதன் மூலம், தீய சக்தியை வளர்த்து விடுகிறார்கள் என்பது வரலாற்றுக் கருத்தாகிறது. - -

பாண்டியனின் ஊழ்

பாண்டியப் பேரரசு, அரசியல் நெறிமுறை பிறழாத பேரரசு, முறைசெய்து காப்பாற்றும் அரசு. செய்தியறிந்து கொள்ள, தவறுதலாக, கதவைத் தட்டி கணவன் மனைவி யிடையே ஐயப்பாடு தோன்ற காரணமாக இருந்ததற். காக, தனது கையையே வெட்டிக் கொண்ட பொற்கைப் பாண்டியனின் வழிவழி வந்த அரசு. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கொற்றமும் அறநெறிக் கொற்றமேயாகும். -

இளங்கோவடிகள், புறஞ்சேரியிறுத்த கதையில் பாண்டிய மன்னனின், செங்கோன்மைச் சிறப்பையும் உலகு தழுவிய புகழுடைய பேரரசாக விளங்கியதையும் விளக்கிக் கூறி வாழ்த்துகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/70&oldid=702733" இலிருந்து மீள்விக்கப்பட்டது