பக்கம்:சிலம்புநெறி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி ) 69.

கரடிகள், கொடிய பாம்புகள் வாழும் புற்றினை அகழா. புலிகள் மான்களோடு மாறுபடாது விளையாடும். இயல்பின. முதலையும், தெய்வமும், இடிகளும் கூட யாருக்கும் துன்பம் செய்வதில்லை என்று பாராட்டு: கிறார்.

கோள்வ லுளியமும் கொடும் புற் றகழா; வாள்வரி வேங்கையும் மான்கண மறலா; அரவும் சூரும் இரை தேர் முதலையும் உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என எங்கணும் போகிய இசையோ பெரிதே' - (புறஞ் சேரியிறுத்த காதை. 5-10). இத்தகு சிறந்த நாட்டின் அரசன் நெடுஞ்செழியன். அவன் அரசுக் கட்டிலில் ஏறின காலம் தொட்டு, அறம் ஒன்றினையே அறிந்தவன்; நல்லனவே கேட்டு பழகிய வன்; முறை செய்தே பழக்கப்பட்டவன் இப்பழக்கமாகிய ஊழ் அவனுடைய ஊனில், உயிரில் உணர்வாகக் கலந்து விட்டது.

அவன், இப்பழக்கத்தின் காரணமாக, நன்றல்லாதன நடக்கக் கூடும் என்ற சிந்தனையே இல்லாமல் போய் விட்டான். நாள் தோறும், நாடி முறை செய்தல் மன்னன் கடமை என்பதை, பழக்கத்தால் மறந்து போயினான். - உழுத சால் வழிச் செல்வதுபோல அவரவர் பழக்கங். களின் வழியாக மனம் செல்வது இயல்பாகிவிட்டது. சமுதாயச் சூழலில், நேற்றைய நன்மை இன்றைய தீமை யாவதும், இன்றைய தீமை நாளை நன்மையாவதும் நடைபெறக் கூடியது என்பதை அவன் அறிந் தான்ில்லை. . . -

இந்தச் சூழ்நிலையில், அத்தாணி மண்டபத்தில் நடந்த ஆடலை அனுபவித்த வகையில், அரசியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/71&oldid=702734" இலிருந்து மீள்விக்கப்பட்டது