பக்கம்:சிலம்புநெறி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி - 75

"குரல்வாய்ப் பாண ரொடு நகரப் பரத்தரொடு

திரிதரு மரபிற் கோவலன் போல இளிவாய் வண்டினொ டின்னிள வேனிலொடு மலய மாருதக் திரிதரும்’

(இந்திர விழவூரெடுத்த காதை 200-203)

என்று, தென்றலுக்கு உவமையாக, கோவலனை எடுத்துக் காட்டுவதால் அறியலாம்.

இங்ங்னம், கோவலன் விளங்கியதற்குக் காரணம் அவன் மட்டுமல்லன். அவன் காலத்திய சமுதாய அமைப்பும் காரணமாகும். கோவலன் காலத்தில் சொத்துடைமை தோன்றி வளர்ந்து விட்டது. சொத் துடைமை தோன்றி வளர்வதற்கு முன்பு, காதல் வாழ்க்கையில் சுதந்தரமிருந்தது.

சொத்துடைமை தோன்றிய பிறகு, சொத்தைப் பாதுகாப்பதற்காக காதல் வாழ்க்கையில் கட்டுப் பாடுகள் விதிக்கப் பட்டன. அப்பொழுது தான்், பலரை மணந்து வாழ்ந்த தலைமகன், ஒரு த்தியை மட்டும் மணந்து வாழும் நியதிக்கு, உட்படுத்தப்படு கிறான். காரணம் சொத்து சிதறிப் போகாமல் குவிந்த முறையில் இருக்க வேண்டும் என்பதாகும். -

ஆனால், பால் உணர்ச்சி வழிங்பட்ட வாழ்க்கையில் தலைமகன் ஒருத்தியொடு கூடி வாழ்வதன் மூலம் மன நிறைவு பெற இயலாது போய்விட்டது. இந்தச் சூழ்நிலை யில் பரத்தையர் வாழ்க்கை முறை ஏற்பட்டது. இந்தக் காலக்கட்டத்திற்குப் பிறகுதான்், பரத்தமை என்ற -ஒழுக்கக்கேடு கால் கொண்டது. -

இந்தப் பரத்தமையும்கூட சங்க காலத்தில் ஒருத்திக்கு ஒருவன் என்ற முறையிலேயே, முறைப் :படுத்தப்பட்டிருந்தது. பின்பு, காலப்போக்கிலே தான்்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/77&oldid=702740" இலிருந்து மீள்விக்கப்பட்டது