பக்கம்:சிலம்புநெறி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பரத்தமை வாணிக, நிலைக்குத் தள்ளப்பட்டுச் சீரழிவுக் குள்ளாக்கியது.

ஆதலால் இயல்பான வளர்ச்சிப் போக்கும், அவனது. வளர்ச்சிப் போக்கை, உந்திச் செலுத்திய அவன் காலத்திய, சமுதாய நிலையும், கோவலனை. கண்ணகியை விட்டுப் பிரித்தன. கண்ணகியிடம் எந்தக் குறையும் இல்லை.

தமிழ் நாகரிகம், பெண்ணைப் பெருமைப்படுத்து. கிறது. பெண்ணுக்கு உரிமைகள் அனைத்தும் உண்டு. சிறந்த நாகரிக சமுதாய அமைப்பு, உரிமைகளை, கடமைகள் வழி அனுபவிக்கவே தூண்டும். உரிமைகள் முனைப்பினைத் தரா; பணிவினைத் தரும். நெஞ்சுநிறை. அன்பினைத் தரும்; தொண்டு மனப்பான்மையினை நல்கும்: அவ்வழி தன்னலமறுப்புத் தோன்றும். பிறர் நலம் விழையும் பெருந்தகைமை விளையும்.

இத்தகு பண்புகளை, பழந்தமிழகத்துப் பெண்கள் பெற்றிருந்தார்கள். அவர்கள் பெறாத உரிமையில்லை, ஆயினும், கணவன் வாழ்விலேயே நாட்டம் காட்டினர். கணவனை வாழ்வித்து வாழ்வதிலேயே இன்புற்றனர்.

பொதுவாக ஒன்று அல்லது ஒருவர் பெற்றுள்ள அழகு நலம், செல்வம், ஆகியன அது, அல்லது அவர் துய்ப்பதற்கல்ல. அவரவர் அழகை - நலத்தை அவரவர் துய்த்தல் அரிது. மலரின் மணத்தை மலரே நுகர்தல்: இயலாத ஒன்று. தென்றலின் குளிர் நலத்தினை தென்றலே துய்த்தல் இல்லை; இயலாததும் கூட.

அதுபோலக் காதலனின் அழகு நலன்களைக் காதலி. யும், காதலியின் அழகு நலன்களைக் காதலனும், மாறித். துய்த்தலே இயற்கையின் நியதி. ஒருவனே துய்க்கத், தன்னை அவனிடம் ஒப்படைத்துத் தன்னல மறுப்புணர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/78&oldid=702741" இலிருந்து மீள்விக்கப்பட்டது