பக்கம்:சிலம்புநெறி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஆதலால், கற்பு என்பது உடல் சார்பு உடையது. மட்டுமன்று. உடல் சார்பான கற்பைக் கணவனின் காவல் காப்பாற்றித் தரும். சிந்தனையில், உணர்வில் கெட்டபிறகு உடல் காப்பாற்றப்பட்டு என்ன பயன்? அதனால் தான்் தமிழ் மறை 'தற்காத்து' என்று கூறுகிறது.

தற்காத்தலிலேயே தன் கணவனுக்கு எதிரிடையான எந்தக் குணக்கேடுகளையும் தான்் பெறாது ஒழுகுதலும் அடங்கும்; பெருமை, புகழ் ஆகியனவும்கூட அடங்கும். இது, கணவனுக்கும் பொருந்தும்.

கண்ணகி தற்காத்துக் கொண்டு வாழ்ந்த பெண்ணிற். சிறந்த பெருந்தகையள். கோவலன் நிலா முற்றத்தில் கண்ணகியுடன் கூடி வாழ்ந்த காலத்தில்தான்், கண்ணகி ஒப்பனை செய்துகொண்டாள். கோவலன் பிரிந்துபோன பிறகு, கண்ணகி, அழகை வெறுத்தாள்; அணிகலன்களை வெறுத்தாள்; துயரினையும் அடைந்தாள்.

ஆனாலும், கணவன் நலம் கருதி, துயரினை மறந் து: ஒழுகினாள். மங்கல நாணைத் தவிர பிற அணிகளை அணியாது நீக்கினாள். கண்ணகியின் அழகிய கண்கள் கோவலனைப் பிரிந்தமையினால் கருங் கண்களாக மாறி விட்டன.

அறம் உண்டு. ஆனால் எந்த அறமும், கூட்டு முறை: யிலேயே செய்யப்படும். மனை அறத்திற்கென்று சில அறங்கள் உள்ளன. இதில் சில அறங்கள் தலைவியும். தலைவனும் சேர்ந்து செய்யும் அமைப்பு உடையன. ஒருவர் இன்றி ஒருவர் செய்தல் இல்லை.

அந்தணர் களைப் பேணுதல், அறநெறி நிற்போரை

வாழ்வித்தல்; விருந்தினரை உபசரித்தல் ஆகியன மனை யறத்தில் தலைவி செய்யக்கூடிய அறங்களாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/80&oldid=702743" இலிருந்து மீள்விக்கப்பட்டது