பக்கம்:சிலம்புநெறி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ) தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தேவந்தி, கோவலன் கண்ணகியைப் பிரிந்ததற்கு ஊழையே காரணமாகக் காட்டுகிறாள். அதாவது, மகளிர் கணவன் பொருட்டு நோற்கும் நோன்பினை முறையாகச் செய்யாமையால் விளைந்த தியூழ் என்று சொல்கிறாள்.

ஆனால், இளங்கோவடிகள் தேவந்தியின் வாயிலாக தான்் இங்கு ஊழை நினைவூட்டுகிறார். இங்கு ஊழின் விளைநிலமாகிய சமுதாய அமைப்பு சீராக இன்மையே கோவலன் பிரிவுக்குக் காரணம். ヘ*

சமுதாய அமைப்பின் சீரின்மையை அரசு திருத்தி நெறிப்படுத்தலாம். ஆனால் புகாரிலிருந்த சோழப் பேரரசு அதைச் செய்யத் தவறிவிட்டது. அல்லது தனி ஒருவர், தன் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிற சமுதாய அமைப்பை, எதிர்த்துப் போராடலாம். அந்தத் தகுதியும், கோவலனுக்கு இல்லாமல் போய்விட்டது.

காரணம், கோவலன் பரத்தை வழி, ஒழுகின தோடன்றி நெறிமுறை சார்ந்து வாழாது நகரில் சுற்றித் திரியும் இளைஞர்களுடன் கூட்டுச் சேர்ந்துவிட்டான். வறுமொழி பேசியும், நெடிய நகை நகைத்தும், வறிதே வாழும் கூட்டு, கோவலனைச் சிந்திக்க விடாமலேயே தடுத்துவிட்டது. ஆதலால் இளங்கோவடிகள் இங்கே ஊழை, எடுத்துக் காட்டவில்லை.

தேவந்தி, கோவலனைக் கண்ணகி திரும்ப அ டை வதற்கு உரியவழியும் காட்டுகிறாள். சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகியவற்றில் மூழ்கிக் காம வேளை வணங்கினால் கோவலனைத் திரும்ப அடையலாம் என்று கூறுகிறாள். பல நாட்கள் கணவனைப் பிரிந்து வருந்தும் கண்ணகிக்கு இந்த வழிகாட்டுதல் ஆறுதல் தரும்; இன்பம் அளிக்கும் என்று தேவந்தி எண்ணினாள். ஆனால், கண்ணகி இதனை ஏற்றுக் கொள்ளவில் லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/82&oldid=702745" இலிருந்து மீள்விக்கப்பட்டது