பக்கம்:சிலம்புநெறி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஒருப்படுவாள்? அதனாலேயே பீடன்று” என்று மறுக் கிறாள்.

அதுமட்டுமன்று. மாதவியிடம் தங்கியிருப்பது கோவலனுக்கு விருப்பமாயின் அவனது விருப்பத்திற்குக் குறுக்கே நிற்பானேன் என்று கருதி, கோவலன் மகிழ்வுக்கு முதன்மை கொடுக்கும் கண்ணகியின் திறமும், புலப்படுகிறது.

இதனைக் கொலைக்களக் காதையிலும் கண்ணகி புலப்படுத்துகிறாள். கொலைக்களக் காதையில் கோவலன் தன்னிலை நினைந்து வருந்திக் கூறுகிறான்;. தன் குறைகளைப் பாராட்டாது, கண்ணகி தன்னுடன் மதுரைக்கு வந்தமையைப் பாராட்டுகிறான்.

அப்போது கண்ணகி போற்றா ஒழுக்கம் புரிந்தீர், யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் ஏற்றெழுந்தனன்யான்' என்று கூறுகிறாள். இங்குப் 'போற்றா ஒழுக்கம் புரிந் தீர்’ என்று கண்ணகி கூறியது. முறையன்று; இடித்துக் கூறியது போலத்தான்் என்று. சிலர் கூறுவர். இது தவறு.

இங்கு போற்றா ஒழுக்கம் புரிந் தீர்' என்பது போற்றுதலுக்குரிய ஒழுக்கத்தை மேற்கொள்ளவில்லை என்றுதான்் பொருளே தவிர, அது இழிநிலை கருத்தைத் தராது.

அதோடு, கண்ணகி பெரிய இடத்துப் பெண். கோவலனுடைய நடைமுறையைச் சமூகம் ஏற்றுக் கொள்ளாமையை அறிந்திருக்கிறாள்; உணர்ந்திருக். கிறாள். சமூகத்தின் நினைப்பு, கோவலனுக்கு எதிராக இருக்கிறது என்பதைக் கண்ணகி அறிந்திருந்தாலும் அவள், கோவலன் தன் கணவன் என்ற அடிப்படையில் காதலையும் கடமையாக்கிக் கோவலன் வார்த்தையை மறுக்காத - மறுக்க நினைக்காத ஒழுகலாறுடையேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/84&oldid=702747" இலிருந்து மீள்விக்கப்பட்டது