பக்கம்:சிலம்புநெறி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி ( 83

என்று, தன் நிலையைக் கோவலனுக்குத் தெரிவித்துத். தன் பால் கோவலனுக்கிருந்த ஐயத்தையும் அச்சத்தையும் நீக்குதற் பொருட்டே கூறுகிறாள்.

இந் நோக்கம் கண்ணகிக்கு ஆழமாக இருந்தது. என்பதை, புகாரில் மாதவியை விட்டுப்பிரிந்த கோவலன், கண்ணகியை நோக்கி வந்தபொழுது கண்ணகி கோவலனுக்குத் தன்னம்பிக்கையும் நலமும் மகிழ்வும் தரும் வகையில் நலங்கேழ் முறுவல் நகை முகம் காட்டி’ வரவேற்கிறாள் என்று இளங்கோவடிகள் கூறுவதால் அறிக. -

அதுபோது கோவலன் தன் வளமார்ந்த செல்வங்கள் அனைத்தையும் இழந்துவந்துள்ள கீழ்மை நிலையை நினைந்து வருந்தி, கண்ணகியிடம் கூறுகிறான். கண்ணகியோ கோவலன் பொருளை இழந்து வருந்தும் செய்தி பற்றி, அலட்டிக் கொள்ளவில்லை.

பொருளிழப்புத் தொடர்பாக யாதொரு வார்த்தையும் சொன்னாளில்லை. ஏன்? பொருளிழப்புச் செய்திகளை யும் தொடர்ந்து விவாதித்தால் வருந்தும் சூழ்நிலைகள் மேலும் உருவாகலாம் என்பது கண்ணகிக்குத் தெரியும்.

அத்தகைய வருத்தத்தைக் கோவலலுக்குக் கொடுக்கக் கண்ணகி தயாராக இல்லை. இதற்கு மாறாக அவன் பொருள் தேவையின் காரணமாக. தாமே கோவலன் மீதுள்ள காதல் மிகுதியால் மேலும் பொருள் வழங்கும் நோக்கத்தோடு சிலம்புள கொணம்' என்கிறாள்.

இங்கேயும் கண்ணகியின் மாண்பு உயர்ந்து காணப்படு: கிறது. சிலம்பு உள' என்று சொன்னதின் மூலம் சிலம்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்ற குறிப்பையும் உணர்த்துகிறாள். இங்ங்ணம் உணர்த்த வேண்டிய அவசியம் என்ன? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/85&oldid=702748" இலிருந்து மீள்விக்கப்பட்டது