பக்கம்:சிலம்புநெறி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி (-) 87

“மன்பதை அலர் துாற்ற மன்னவன் தவறிழைப்ப

அன்பனை இழந்தேன் யான் அவலங் கொண்

டழிவதோ' (துன்பமாலை-36-37)

என்று கூறுகிறாள். ஒரு நாட்டு அரசு தவறு செய்து விட்டது என்று நம்புகிறாள். ஆனால், தன் கணவன் தவறு செய்யவில்லை என்று திடமான நம்பிக்கை நெஞ்சளவில் மட்டும் கொள்ளாமல், தன் கணவனின்மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்க, அரசை எதிர்த்துப் போராடும் அளவுக்கு, கண்ணகி துணிந்து விட்டாள்.

பாண்டிய அரசிடம் வழக்குரைக்கச் சென்றதே கணவனை மீட்க அல்ல; கணவனின் புகழை மீட்கத்தான்்! கோவலன் கள்வன் அல்லன் என்று உலகறியச் செய்து அவன் புகழைக் காப்பாற்றிய கண்ணகியின் கற்பு, தெய்வக் கற்பு; மறக் கற்பு: அரசியலையே மாற்றி யமைத்த ஆளுமையுடைய கற்பு.

கணவன் புகழ் காத்த கண்ணகி

கண்ணகி வள்ளுவம் காட்டிய வாழ்க்கைத் துணை தலத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவள். பொறுமையின் மறுபதிப்பாகப் பூம்புகாரில் வாழ்ந்த கண்ணகிக்கு மதுரை -யில் இவ்வளவு ஆற்றாமை ஏன்? வெகுளி ஏன்? இங்கு தான்் கண்ணகியின் சால்பு ஒளி பெற்று விளங்குகிறது.

ஒட்டு மொத்தமாக வெகுளல்தான்் தீது. வெகுள

வேண்டிய இடங்களில் வெகுளாமல் இருப்பவர்கள்

அநியாயக்காரர்கள்; கொத்தடிமைகள்; கோழைகள்; வாழ்க்கையின் பொருள்புரியாத புல்லறிவாளர்கள்.

வாழ்க்கையில், சொற்காத்தல் என்பது ஒரு சிறந்த பண்பாடு. சொல்லப்படுவன எல்லாம் சொல்லல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/89&oldid=702752" இலிருந்து மீள்விக்கப்பட்டது