பக்கம்:சிலம்புநெறி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பொதுப்படையாக இருந்தாலும் சிறப்பாக சொல் என்பது புகழையே குறிக்கும்.

பிறரால் மகிழ்ந்து சொல்லப்படுவது புகழ் அதனால் தான்், திருவள்ளுவர் 'சான்றோர் எனக் கேட்ட தாய்' என்றார். இதையே பெண்ணின் பெருஞ் சிறப்பிற்குத் 'தகை சான்ற சொற் காத்தல்’ என்பதும் ஒரு கடமை என்றும் கூறுகிறார்.

மானிட வாழ்க்கையில் காதல் - நட்பு ஆகிய இரு உறுப்புக்கள் மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் தோழமை உறுப்புக்களாகும். இந்தப் பொறுப்புக்களை ஏறறுக் கொள்வோர், தொடர்புடையோர் நலனைப் பாதுகாப்பர்.

கண்ணகி கோவலனுக்குக் காதற் கடமை பூண்டவள். கோவலனின் வாழ்க்கை தன்னுடைய நலனுக்கு ஏற்ற தாக இல்லையானாலும் அவன் புகழைப் பாதுகாக்கும் உணர்வோடு பூம்புகாரில் பொறுமையாக இருந்தாள். பூம்புகாரில் பாதுகாத்த கணவரின் பெரும் புகழைப் பாதுகாப்பதற்கே மதுரைக்கு வந்ததையும் கண்ணகி நினைவு கூர்கிறாள்.

ஆதலால், தனது இளமையை இழந்தும் வாழ்க்கை நலன்களை இழந்தும் காப்பாற்றிய கணவனின் புகழ் மதுரையில் மாசுறுவதை அவளால் தாங்கமுடியவில்லை. கோவலனின் இழப்பில் கண்ணகிக்கு இருந்த ஆற்றாமையைவிட-கோவலன் மீது சுமத்தப் பெற்ற பழியில் தான்் அவளுக்கு இருந்த ஆற்றாமை-ஆத்திரமே அதிகம்.

கோவலன் கொல்லப்பட்டான் என்ற செய்தி கேட்ட வுடனேயே, கண்ணகி துன்பத்தின் எல்லைக்குச் சென்று விடுகிறாள். கோவலன் கள்வன், அதனால் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/90&oldid=702753" இலிருந்து மீள்விக்கப்பட்டது