பக்கம்:சிலம்புநெறி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

யெல்லாம் தப்பித்துக் கொள்ள விடுகிறாள்; நீத்திறத்தார். மட்டுமே அழியுமாறு அழிக்கின்றாள்.

தித்திறத்தாரை அழிப்பது பாவமா? கழனியில் களை பிடுங்குவது தவறா? ஆதலால் கண்ணகி மதுரைக்கு எரியூட்டியது அரசியல் நீதி! சமுதாய நீதி: அறத்தின் ஆட்சி! கொற்றம் செய்த கொடுமையிலிருந்து குடி. மக்கள். நல்லாட்சியை அமைத்த வரலாறு!

உரைசால் பத்தினி

இளங்கோவடிகள் தமது காப்பியத்தை மூன்று குறிக் கோள்களோடு தொடங்குகின்றார். அவற்றுள் ஒன்று. * உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தல்' என்ப" தாகும். ஒருவரைப் பண்பறிந்து போற்றும் பண்பு எல்லாருக்கும் வந்து விடுவதில்லை.

சமுதாயத்தில் இழி மனப்பான்மையுடையவர்கள் நல்லதன் தன்மை அறிய மாட்டார்கள். அதனால் நன்மையைப் பாராட்டும் மனப்பாங்கு அவர்களுக்கு. இருக்காது. ஏன்? அவர்களுடைய அறியாமையின் காரணமாகத் தீமையை நன்மையென்று போற்றினாலும் போற்றுவர். போற்றும் பண்பு என்பது உயர் பண்பு. நன்மையை-நன்மையின் திறத்தை அறிந்து போற்றுவ தென்பது அறிஞர்க்கு அழகு. -

ஒரு பெண் பத்தினிப் பெண்ணாக வாழ்க்கையில் உயர்தல் எளிதன்று. அஃதொரு கடுமையான சோதனை. நல்ல கணவன் வாய்ப்பின் அம்முயற்சி வெற்றி: பெறலாம். நற்றிறமில்லாதவனாக வாய்த்து விடின் ஒரு பெண்ணின் கற்புக் கடமைகள் கூடுகின்றன. கடமை. களும் பொறுப்புக்களும் கூடும்பொழுது சோதனைகளும் மிகத்தான்் செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/96&oldid=702759" இலிருந்து மீள்விக்கப்பட்டது