பக்கம்:சிலம்புநெறி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி இ 95

கற்பு என்பது ஒழுக்கம் மட்டுமன்று. அது கடமைச் சார்புடையதுமாகும். ஆனால் இந்த நூற்றாண்டு அறிவியலறிஞர்கள் ஒருவர் தம் பொறுப்புக்களை, கடமைகளை முறையாகச் செய்தல் ஒழுக்கத்தின் அடையாளம் என்று வரையறுத்துக் கூறுகின்றனர்.

ஆனால் இன்னமும் நம்முடைய நாட்டில் ஒழுக்கம் என்ற சொல்லைக் கடமையோடு பொருத்திப் பார்க்கிற மனப் பாங்கு வளரவில்லை. -

வள்ளுவம் வகுத்துக் காட்டிய பெண்மையின் பெருஞ் சிறப்பு,

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்பதாகும்.

இப் பண்புகள் அப்படியே கண்ணகியிடம் பொருந்தி அமைந்திருந்தன. ஆயினும் தற்கொண்டாற் பேணுதல் என்ற துறையில் கண்ணகியால் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை அஃது அவள் குறையன்று. கண்ணகி காலத்தில் சமுதாய அமைப்பு சீர் கெட்டிருந்தது.

பரத்தமை ஒழுக்கம் தலைமகனுக்குரிய ஒழுகலாறு: போல ஏற்றுக் கொள்ளப் பெற்ற தீயூழ்க் காலம். கண்ணகியால் என்ன செய்ய இயலும்? அந்தச் சூழ்நிலை யையும் அவள் எதிர்த்துப் போராடுவதென்றால் கோவலனின் விருப்ப உணர்வுகள் கெட்டுப் போகுமோ என்ற உணர்வில் தன்னல மறுப்பிலும், கோவலனின் நலம் பேணுதலிலும் இருந்த முனைப்பு அவ்வகையில் அவளைப் போராடத் தூண்டவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/97&oldid=702760" இலிருந்து மீள்விக்கப்பட்டது