பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

சங்கம் சென்று, அதிலிருந்து தமிழ் ஆராய்ச்சி செய்து வந்த புலவர்களை யெல்லாம் கண்டு பேசினார். பல நாட்கள் மதுரையிலே தங்கிவிட்டார்.

அங்கே அவர் தங்கியதற்குத் தமிழ்ப் புலவர்ளோடு பல நாள் பழகி இன்புற வேண்டும் என்ற விருப்பமே அதன் காரணம். ஒரு நாள் திருமாலிருஞ் சோலை மலை போய்ப் பார்த்து வந்தார். சிலம்பாற்றையும் புண்ணிய சரவணமென்னும் பொய்கையையும் கண்டு வந்தார். தமிழ்ப் புலவர்களோடு பழகப் பழக, அவர்களோடே இருந்துவிடலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று ஆனால் அது நடக்கிற காரியமா? தன் புதல்வரை அயல் நாட்டில் வாழும்படி செய்ய அவருடைய தந்தைக்கு மனம் வருமா ?

சேர மன்னனின் இளங்குமரருடைய அறிவாற்றலையும் பண்பையும் கண்டு புலவர்கள் வியந்தனர். மன்னர் குலத்தில் பிறந்தோம் என்ற மிடுக்கே இல்லாமல் மிக்க பணிவாக நடந்து கொண்டார் இளங்கோ. தாம் மிகுதியாகப் பேசாமல் புலவர்கள் பேசுவதைக் கேட்பதில் ஆர்வம் காட்டினார். அப்படிப் பேசினாலும் சில சொற்களே சொன்னார். சில சொற்களேயானாலும் அவையே அவருடைய பண்பை எடுத்துக் காட்டின. பிற்காலத்தில் அவர் பலரும் போற்றும் பெரிய நிலையை அடைவார் என்று புலவர்கள் பாராட்டினார்கள்.

புலவர்களிடம் பழகிய முறையினால் அவர்களுடைய பேரன்பைப் பெற்றார் இளங்கோ. எல்லாப் புலவர்களிடமும் பழகிப் பயன் பெற்றாலும் சிலரிடம்