பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

னார்கள். இதுவரையில் இப்படி ஒரு காட்சியை நாங்கள் கண்டதில்லை” என்று அந்த முதியவன் கூறினான்.

“அந்தப் பெண்மணி எங்கிருந்து வந்தாள், தெரியுமா?” என்று அரசன் கேட்டான்.

“எந்த நாட்டுப் பெண்மணியோ? யாருடைய மகளோ? ஒன்றும் அறியோம்” என்றான் அவன்.

அப்போது அருகில் நின்று கொண்டிருந்த புலவர் சாத்தனார், “எனக்கு அந்தப் பெண்மணியின் வரலாறு தெரியும்” என்று சொல்லத் தொடங்கினர். “இந்தப் பெண்மணி மாபெரும் பத்தினி. கண்ணகி என்னும் பெயர் உடையவள். இவள் காற்சிலம்பைக் கொண்டுபோய் விற்று வரலாமென்று இவள் கணவன் மதுரைக்குச் சென்றான். பாண்டிய மன்னனுடைய தேவியின் சிலம்பு ஒன்று திருட்டுப் போயிருந்தது. இதுதான் அந்தச் சிலம்பு என்று ஒரு பொற்கொல்லன் சொல்ல, அதைக் கேட்ட பாண்டியன் அவனைக் கொல்லச் செய்தான். தன் கணவன் கொலையுண்டதைக் கேட்ட இந்தப் பத்தினி ஒற்றைச் சிலம்புடன் பாண்டிய மன்னனிடம் சென்று அவன் செய்த பிழையை எடுத்துச் சொன்னாள். பிறகு இந்த ஊரை எரித்துவிடுகிறேன் என்று சபதம் செய்து புறப்பட்டுத் தன் ஒரு மார்பைத் திருகி நகரின்மேல் வீசினுள். அதனால் மதுரை தீப்பற்றி எரிந்தது. தன்னுடைய பிழையை உணர்ந்தவுடன் பாண்டிய மன்னன் உயிரை விட்டான். அவனுடைய அரசி தன் உயிரைக் கொண்டு அவன் உயிரைத் தேடினவளைப்போல அவனுடனே மாய்ந்தாள். மதுரையைச் சுட்ட பத்தினி தன் நாடாகிய சோழநாட்டுக்குக் கணவன் இல்லாமல்

சில-3