பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

னிடம் பகைமை கொண்டிருந்த அரசன், ‘அவனை இந்த நாட்டைவிட்டுத் துரத்திவிடு’ என்றான். ‘இவன் செய்துவரும் குற்றத்துக்கு அந்தத் தண்டனை போதாது. இவனைத் துரத்திவிட்டால் வேறு உருவத்தில் இன்னும் யாரேனும் வந்து சேருவார்கள். ஆகையால் இனி யாருமே இப்படி வந்து வஞ்சகம் செய்யாதபடி, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்’ என்று பரதன் கூறினான். 'அப்படியானால் சிறையில் அடைத்துவிடலாமா? என்று அரசன் கேட்டான். ‘அந்தத் தண்டனையும் போதாது. இவனைக் கொன்று விடுவதுதான் தக்கதாகும்' என்று கூசாமல் சொன்னான் பரதன். அரசனும், 'அப்படியே செய்து விடு’ என்று சொல்லிவிட்டான். பரதன் சங்கமனைக் கொலை செய்யும்படி ஏற்பாடு செய்தான். குற்றம் சிறிதும் இல்லாத வணிகன் கொலையுண்டான்.

“அந்தச் சங்கமனுடைய மனைவியாகிய நீலி என்பவள் தன் கணவன் கொலையுண்டதை அறிந்து கதறினாள்; புலம்பினாள். அரசனே! இது முறையாகுமா? ஊர்க்காரர்களே! இது நியாயமா? இந்தத் தெருவில் வாழ்பவர்களே! இது நீதியா?” என்று பல இடங்களிலும் சென்று முறையிட்டாள். இப்படிப் பதினான்கு நாட்கள் துயரம் தாங்காமல் அலைந்து புலம்பித் திரிந்தாள், பதினாலாவது நாள் ஒரு மலையில் ஏறி உயிரை விட்டுத் தன் கணவனுடன் மறு உலகத்தில் சேர எண்ணினாள். அதற்காக ஒரு மலையில் ஏறி, கீழே விழுவதற்கு முன், 'எங்களுக்கு இந்தத் துயரத்தை உண்டாக்கியவர்கள் யாரோ அவர்கள் இதைப்போன்ற துயரத்துக்கு ஆளாகட்டும்!' என்று