பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

உணரவேண்டிய உண்மை இது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற அரிய உண்மையைப் பாண்டிய மன்னன் தன் உயிரைக் கொடுத்து நிலைநாட்டி விட்டான்” என்றார்.

“ஆம், அது பெரிய உண்மைதான். அரசர் குடியில் பிறந்தமையால் தங்களுக்கு இந்த வரலாற்றிலிருந்து இந்த உண்மை முதலில் புலப்பட்டது.”

“வேறு பல கருத்துக்களும் தோன்றின. இந்தக் குறவர்கள் தாங்கள் கண்ட அற்புதக் காட்சியைச் சொன்னார்களே; அதிலிருந்துதானே இத்தனை நிகழ்ச்சிகளையும் நான் அறிந்துகொள்ள வழி பிறந்தது? அந்தப் பத்தினித் தெய்வத்தின் பெருமையை நாம் மறக்க முடியுமா?”

“சேர அரசர் பிரான் கண்ணகிக்குக் கோயில் கட்ட எண்ணியிருக்கிறார். இமயத்திலிருந்து விக்கிரகம் செய்யக் கல் எடுத்து வரப்போகிறார்” என்று இடையே சாத்தனார் சொன்னார்.

“அப்படியா? அது மிகவும் போற்றத்தக்க செயல். இனி நாள் ஆக ஆக அந்த வீரபத்தினியை யாவரும் போற்றுவார்கள். புகழ் மிக்க பத்தினியை உயர்ந்தவர்கள் ஏத்திப் பாராட்டுவார்கள் என்பதும் ஒரு பெரிய உண்மை. அதனையும் கண்ணகியின் வரலாற்றால் உணரலாம். கடைசியில் நீங்கள் சொன்ன சங்கமன் கதை மனத்தை உருக்குகிறது. எல்லாம் வினையின் விளைவு என்பது எவ்வளவு தெளிவாகத் தெரிகிறது முன் செய்த வினை அடுத்த பிறப்பில் வந்து எப்படியாவது இன்ப துன்பங்-