பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55



8. இமயத்துச் சிலை

பாடிவீட்டில் செங்குட்டுவன் தங்கியிருந்தபோது அவனைப் பார்ப்பதற்கு வடநாட்டிலிருந்து ஒரு கூட்டம் வந்தது. அந்தக் கூட்டத்தில் நடனமாடும் மகளிர் நூற்றுநான்கு பேர் இருந்தனர். இசைக் கருவிகளை வாசிப்பவர் இருநூற்றெட்டுப்பேர், விகடம் பண்ணுகிறவர்கள் நூறுபேர் வந்தர்கள். தேர்கள் நூறு வந்தன; யானை ஐந்நூறும், குதிரைகள் பதினாயிரமும் வந்தன. வடநாட்டில் கிடைக்கும் பலவகைப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு இருபதினாயிரம் வண்டிகள் வந்தன. சட்டையும் தலைப்பாகையுமுடைய பிரதானிகள் ஆயிரம் பேர் இந்தக் கூட்டத்துடன் வந்தனர். அவர்களைக் காஞ்சுகிகள் என்பார்கள்; சட்டையிட்டவர்கள் என்பது அந்தச் சொல்லுக்குப் பொருள். அந்த ஆயிரம் பேர்களுக்கும் தலைமை தாங்கி வந்தவன் சஞ்சயன் என்பவன்.

அவர்கள் வந்திருப்பதை வாயிலோரால் அறிந்த செங்குட்டுவன் அவர்களை வருக என்று சொல்லி அழைக்கச் சொன்னான். அந்தக் கூட்டத்தின் தலைவனாகிய சஞ்சயன் உள்ளே வந்து அரசனை வணங்கினான். “நீங்கள் யார்?” என்று அரசன் கேட்க, “நாங்கள் நூற்றுவர் கன்னராகிய வடநாட்டு மன்னர் அனுப்ப வந்தவர்கள். அவர்கள் தங்களோடு சேர்ந்து கொண்டு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறார்கள். தாங்கள் இமயத்துக்கு யாத்திரையாகப் புறப்பட்டதை அறிந்து எங்களை அனுப்பினார்கள். அதோடு ஒரு விண்ணப்பமும் செய்து கொள்ளும்படி