பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சிலம்பு பிறந்த கதை


1. இளங்கோவின் பயணம்

ழைய காலத்தில் தமிழ்நாடு மூன்று பிரிவாகப் பிரிந்திருந்தது. அவற்றைச் சோழ நாடு, பாண்டி நாடு, சேரநாடு என்று சொன்னார்கள். சோழ நாட்டின் தலைநகராகிய உறையூரில் இருந்து சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்தார்கள். பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையில் பாண்டிய மன்னர்கள் செங்கோல் செலுத்திவந்தார்கள். சேரநாட்டுக்குத் தலைநகர் வஞ்சிமாநகர். அதைத் தம்முடைய இடமாகக்கொண்டு சேரமன்னர்கள் அரசாட்சிபுரிந்தார்கள். இந்த மூன்று மன்னர்களின் பரம்பரையும் மிக மிகப் பழைய காலம் முதற்கொண்டே இந்த நாட்டில் இருந்துவருகின்றன.

சோழ நாட்டுக்குச் சிறப்புத் தருவது காவிரி ஆறு. பாண்டிநாட்டுக்குப் பெருமை தருபவை வையை, தாமிரபர்ணி என்னும் ஆறுகள். சேர நாட்டில் ஓடுவது பேராறு. ஒவ்வொரு நாட்டிலும் கடற்கரையைச் சேர்ந்த இடங்கள் இருந்தன. அதனால்