67
கண்ணகிக்கு வந்த துன்பத்தையும் அறிந்த அவள் எரியில் விழுந்து இறந்தாள். கோவலன் கண்ணகியுடன் மதுரைக்கு வழித் துணையாக வந்த கவுந்தி என்னும் பெண் துறவி உண்ணாமல் விரதமிருந்து உயிர் நீத்தாள். இவற்றையெல்லாம் அறிந்து, மதுரை மாநகர் தீக்கு இரையானதையும் தெரிந்து கொண்டு, என் ஊராகிய தலைச்செங்கானம் சென்றேன்.”
“நீங்கள் சொன்ன வார்த்தையால் யாரும் இறந்ததாகத் தெரியவில்லையே?”
“இனிமேல்தான் அந்தக் கதை வருகிறது. என் ஊருக்கு அருகில்தான் சோழனது தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினம் இருக்கிறது. அங்கே உள்ள பெரியவர்களிடம் மதுரையில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் உற்ற துன்பங்களையும் மற்றவற்றையும் சொல்லி வருந்தினேன். அந்தச் செய்தியைக் கேட்டுக் கோவலனுடைய தந்தையாகிய மாசாத்துவான் தன் பொருளையெல்லாம் தானம் பண்ணிவிட்டுப் பெளத்த சமயத் துறவியாகிவிட்டான். அவனுடைய மனைவி தன் மகன் இறந்தது கேட்டுத் தன் உயிரை நீத்தாள். கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கனோ ஆசீவக சமயத் துறவி ஆனான். அவன் மனைவியும் இறந்து பட்டாள். மாதவி இந்த அவலச் செய்தியைக் கேட்டுத் தான் பெளத்த சமயத் துறவியானதோடு, தன் மகள் மணிமேகலையையும் துறவு பூணச் செய்து விட்டாள். என்னாற் செய்தியை அறிந்து கோவலன் தாயும் கண்ணகியின் தாயும் இறந்தார்கள் அல்லவா? அதற்குக் காரணமாகும் பாவம் என்னைத்தானே