பக்கம்:சிலம்பொலி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

சிலம்பொலி

கிழத்தி, அவர்களைத் தனியே குடி அமர்த்திய போது, அவ்வாழ்க்கைக்குத் துணை செய்ய, “வேறுபடு திருவினை” வழங்கினள். வேறுபடு திருவாவது நானா விதமான செல்வம் என்கிறார் அரும்பத உரையாசிரியர். பல படைப்பாகிய செல்வம் என்கிறார் அடியார்க்கு நல்லார்.

அவ்வாறு வேறுபடு திருவினைக் கோவலன் தாய் கொடுப்பதற்கு முன்பே, மங்கல அணியல்லாமல், ஒருகாழ் முத்தம் போலும் பல்வேறு அணிகளை அணிந்திருந்தாள் கண்ணகி. அணிந்துள்ள அணிகளின் பொறை தாங்க மாட்டாது, முகம் முத்து முத்தாக வியர்த்துப் போய் விடும்; இடை பெரிதும் வருந்தித் தளர்ந்து போய் விடும். அந்த அளவான பேரணிகலன்களை அணிந்து கொண்டிருந்தாள். கண்ணகியோடு கோவலன் மகிழ்ந்திருந்த நாளில்தான், கோவலன் தாய், வேறுபடு திருவினை வழங்கி அவர்களை வேறே குடி அமர்த்தினாள்.

திங்கள்முத்து அரும்பவும், சிறுகுஇடை வருந்தவும்
இங்குஇவை அணிந்தனர் என்உற் றனர்கொல்!
………… ………… ………… …………
உலவாக் கட்டுரை பல பாராட்டித்
தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி,
வயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்
வார்ஒலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி
………… ………… ………… …………
வேறுபடு திருவின் வீறுபெறக் காண,
உரிமைச் சுற்றமொடு ஒருதனிப் புணர்க்க”

—மனையறம்: 71-88

தன் மனை புகுந்து, கண்ணகியின் வாடிய மேனி வருத்தம் கண்ட கோவலன் கூறிய முதற் கூற்றில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/104&oldid=1782492" இலிருந்து மீள்விக்கப்பட்டது