பக்கம்:சிலம்பொலி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 99.

அணிகலன்தொலைந்த இலம்பாடு கூறப்படவில்லை. அகுலம் தருவான் பொருட் குன்றம் தொலைந்த இலம் பாடு நானுத்தரும்’ (கனாத்திறம் 70-71), குலந் தருவான் பொருள்”என்பதற்கு அரும்பத உரையாசிரியர், "தாயத்தாரால் தரப்பட்ட பொருள்' என்றும், அடியார்க்கு நல்லார், 'குலத்தில் உள்ளார் தேடித் தந்த மிக்கநிதிக்குன்றம்;தொன்றுதொட்டு வருகின்ற பொருள்'

என்றும் பொருள் கூறியுள்ளனர்.

ஆகவே, கண்ணகியைக் கண்ட அள்வே, தான் தொலைத்து விட்டதாகக் கோவலன் கூறிய குலந்தருவான் பொருள் என்பது அவன் தாயாம் பெருமனைக் கிழத்தி, அவர்களின் இல்லறச் சிறப்பு காண வழங்கிய "வேறுபடு திரு” மட்டுமே. அது வழங்குவதற்கு முன்பாகக் கண்ணகிபால் இருந்த அணிகலன்களின் அழிவுபற்றி ஏதும் கூறப்படவில்லை.

கண்ணகியைக் கண்ணுற்றதும் கூறிய முதற்கூற்றில் தொலைத்தது, "குலம் தருவான் பொருள்” எனப் பொதுப்படக் கூறினானேனும் "சிலம்புள கொண்மின்' எனக் கண்ணகி கூறிய பின்னர், அச்சிலம்பு முதலாக ஈட்டக் கருதியவற்றில் 'சென்ற கலனொடு உலந்த பொருள்” (கனாத்திறம் 74-75) என அணிகலன், பொருள் இரண்டையுமே கூறியுள்ளான்; ஆகவே, கண்ணகியின் அணிகலன்களும் அழிக்கப்பட்டன என்பதில் ஐயம், இல்லை -

சட்ட எண்ணியபோது, பொருளோடு, கலனையும் இணைத்தே கூறினானேனும் நாணுத்தரும் இலம்பாடு உறுதற்குக் காரணமான இழப்பினைக் கூறும்போது, பொருள் ஒன்றை மட்டுமே கூறினான்; பொருள் என வறிதே கூறிவிடாமல், குலந்தருவான் பொருள் குன்றம் எனக் கூறியுள்ளான். ஆகவே, கலன் அழிவும் ஓரளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/105&oldid=560728" இலிருந்து மீள்விக்கப்பட்டது