பக்கம்:சிலம்பொலி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$100 . சிலம்பொல

நிகழ்ந்திருக்குமேனும், பொருட் குன்றமே அழிந்தது போலும் பேரழிவுக்கு அது ஆளாகவில்லை, ஆகவே கண்ணகி பால், மங்கல அணி தவிர்த்த ஏனைய அண கலன்கள் அவ்வளவும் அறவே அழிந்து போயின என: கொள்வதற்கு இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது

'கானல்வரிப் பாட்டின் முடிவில், மாதவியை வெறுத்துக் கடற்கரையிலேயே விடுத்துத் தனித்துத் திரும்பிய கோவலன், கண்ணகியை அடைவதற்குச் சற்று முன்பாக, கண்ணகி துயர் தீர்வதற்காம் வழிவகை கூறி ஆறுதல் உரைக்கும் தேவந்திக்குக், கண்ணகி பொற் றொடி அணிந்தேகாட்சிஅளித்துள்ளாள். கண்ணகியைத் தேவந்தி, "பொற்றொடீ”என்றே அழைத்துள்ளாள். அது மட்டுமன்று; கணவனை அடைய, சோமகுண்டம், சூரிய குண்டம் ஆகிய துறைகளில் நீராடிக்காமவேள்கோட்டம் தொழலாம் எனக் கூறிய தேவந்தி கூற்றை மறுத்து, அது பீடு தருவதாகாது எனப் பதில் அளித்த கண்ணகி, ஆசிரியர்க்கு ஆயிழை அணிந்தே காட்சி அளித்துள்ளாள். "பொற்றொடீஇ ...சோமகுண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு. தாமின்புறுவர் உலகத்துத் தையலார் போகம் செய் பூமி யினும் போய்ப் பிறப்பர்; யாமொரு நாள் ஆடுதும்; என்ற அணியிழைக்கு, அவ் ஆயிழையாள் பீடன்று என இருந்த பின்னர்” (சிலம்பு: 9: 54-64) என்ற வரிகளைக் காண்க.

ஆக, கோவலன் கண்ணகியை அடையும் போது, கண்ணகி

யின் எல்லா அணிகளும் தொலைந்து விடவில்லை. அவள் பால், சிலம்பு மட்டுமல்லாமல், பொற்றொடி இருந்திருக் கிறது. ஆராய்ந்து அணியத் தக்க வேறுபிற அணிகளும் இருந்திருக்கின்றன என்பது, தேவந்தி, ஆசிரியர் ஆகிய இருவர் கூற்றால் உறுதியாகிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/106&oldid=560729" இலிருந்து மீள்விக்கப்பட்டது