இளங்கோ அடிகளுக்கு மறதியா?
மதுரையில், மாதரி இல்லத்தில், தான் ஆக்கிப் படைத்த உணவுண்டு, சிலம்பு விற்கப் புறப்பட்ட கோவலனைத் தழுவி, அவன் முடியில் சூடியிருந்த மலரைத் தன் கூந்தலில் அணிந்து கொண்டு, காலையில் வழி அனுப்பி வைத்த கண்ணகி, அன்று மாலையில் வந்து நிற்கும் தன்னைக் காண மாட்டா நிலையில், புண்ணிலிருந்து செங்குருதி சொட்டச் சொட்டக் கொலையுண்டு வீழ்ந்து கிடக்கும் கணவன் உடலைக் கண்ணுற்ற கொடுமையைப் படம் பிடித்துக் காட்டும். சிலப்பதிகார வரிகள் இவை:
“வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன் மேற்
கொண்டாள், தழீஇக் கொழுநன்பால், காலைவாய்;
புண்தாழ் குருதி புறம்சோர, மாலைவாய்
கண்டாள், அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம்!”
சிலம்பு: 19: ஊர்சூழ்வரி: 35-38
இவ்வரிகளுக்குக், “காலைப் பொழுதின் கண், ஆயர் பாடியிடத்தே, தன் கணவனைத் தழீஇ, அதற்குக் கைம்மாறாக, அவனுடைய வண்டொலிக்கும் குஞ்சியின் மாலையை வாங்கித் தன் வார்குழல் மேல் கொண்ட