பக்கம்:சிலம்பொலி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

சிலம்பொலி

கொற்றவை வாயிலில் பொற்றொடியைத் தகர்த்து விட்டு, வைகையின் ஒரு கரை கொண்டு சேரர் நாடு அடைந்த போதும், கண்ணகி மேனியில் சிறந்த அணிகள் இருந்ததை,சேரர் கோமான் செங்குட்டுவன், கண்ணகியை “செயிடுடன் வந்த இச்சேயிழை” (சிலம்பு : 25-108) என்ற தொடர் மூலமே குறிப்பிட்டான் எனப் பாடுவதன் மூலம் இளங்கோ அடிகளார் உறுதி செய்துள்ளார்.

கோவலன் பின்னாக, மாதவத்தாட்டி கௌந்தி அடிகளாரோடு ஐயை கோட்டம் அடைந்த கண்ணகியின் காதுகளில் மகரக் குழை கிடந்து ஒளி விடுவதை, ஆசிரியர் இளங்கோவடிகளார் காண்கிறார். “கோவலன் தன்னொடும் கொடுங்குழை மாதொடும் மாதவத்தாட்டியும்… ஐயைதன் கோட்டம் அடைந்தனர்” (சிலம்பு : 11 205-216) என்ற தொடர்களைக் காண்க.

திங்கள் ஒளியில் மூழ்கியவாறே, காட்டு வழியைக் கடந்து செல்லும் போது, தளர்ச்சி போகக் கணவன் தோளைத் தழுவிக் கொள்ளும் போதும், “நின் கணவன் கள்வனல்லன்! கள்வன் எனச் சொன்ன இவ்வூரை எரியுண்ணும்” என்ற வெய்யோன் உரை கேட்ட அளவே மாநகர் மன்னனிடம் முறை கேட்க, கையில் சிலம்பு ஏந்தி விரையும் போதும், கொலையுண்டு வீழ்ந்து கிடக்கும் கோவலன் கால்களைத் தொழுது இரு கைகளாலும் பற்றிக் கொண்டிருக்கும் நிலையிலும், கண்ணகியின் கைகளிலும் தோள்களிலும், வளைகள் கிடந்து ஒளி விடும் காட்சியை இளங்கோவடிகளார் தொடர்ந்து கண்டு வந்துள்ளார். “தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி” (சிலம்பு : 13 : 33) என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத் தோளி நின்றிலள்; நின்ற சிலம்பொன்று கையேந்தி” (சிலம்பு : 19-1-2); “அழுதேங்கி நிலத்தின் வீழ்ந்து ஆயிழையாள் தன் கணவன் தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/110&oldid=1789426" இலிருந்து மீள்விக்கப்பட்டது