புலவர் கா. கோவிந்தன்
105
பற்ற” (சிலம்பு 19: 64-65.) என வரும் தொடர்களில், ஆசிரியர் இளங்கோவடிகளார், “தொடிவளைச்செங்கை”, “இலங்கீர் வளைத் தோளி,” “துணைவளைக்கை” எனக் கண்ணகியின் வளை அணியை விதந்தோதியிருப்பது காண்க.
மேலே கூறிய இடங்களில் கண்ணகியின் வளையணியைக் கண்ணுற்ற ஆசிரியர், “தீத்திறத்தார் பக்கமே சேர்க” என எரிக்கடவுளுக்கு ஏவலிடும் கண்ணகியின் கைகளில் பொற்றொடி கிடந்து பொலிவுற்ற காட்சியையும் கண்டுள்ளார். “தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று, காய்த்திய பொற்றொடி ஏவப்புகையழல் மண்டிற்று” (சிலம்பு : 21: 55-56) என்ற தொடரினைக் காண்க.
தன் அழுகுரல் கேட்டு உயிர்த்தெழுந்த கோவலன் அவள் கண்ணீரைத் தன் கையால் துடைத்த போது, அழுதேங்கி நிலத்தில் சாயும் அந்நிலையிலும், “கள்வனைக் கொல்லுதல் கடுங்கோல் ஆகாது” எனப் பாண்டியன் உரைக்கக் கேட்டுச் சினம்மிக்கு, “நற்றிறம் படராக் கொற்றவ!” என விளித்து, “என் கால் சிலம்பில் உள்ளவை மாணிக்கப் பரல்கள்” எனக் கூறும் போதும், மதுரையை எரியூட்டத் துணிந்து கொங்கையைத் திருகி மதுரை மாநகர் மீது எறிந்த அந்நிலையிலும், பின் தொடர்ந்து வருவதல்லாது முன் வந்து நிற்க மாட்டாது மதுராபுரித் தெய்வமும் அஞ்சும் வண்ணம் சினங் கொண்டு நிற்கும் நிலையிலும், கண்ணகியின் மேனியில் அணி இழைகள் கிடந்து விளங்கப் பெற்றிருந்த காட்சியை இளங்கோவடிகளார் கண்டு வந்துள்ளார். “அழுதேங்கி நிலத்தின் வீழ்ந்து ஆயிழையாள்,” (சிலம்பு : 19 : 64); “கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று; வெள்வேல் கொற்றம் காண் என, ஒள்ளிழை, நற்றிறம் படராக் கொற்கை வேந்தே. என் கால் பொற் சிலம்பு மணியுடை