பக்கம்:சிலம்பொலி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

சிலம்பொலி

அரியே?” (சிலம்பு : 20 : 64-67); "மணிமுலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள் விளங்கிழையாள்” (சிலம்பு 21 : 54-56), “அலமரு திருமுகத்து ஆயிழை நங்கை நன் முன்னிலை ஈயாள்” (சிலம்பு 23 : 15)—அந்நிலைகளைக் குறிக்கும் இவ்வரிகளில், கண்ணகியை, “ஆயிழையாள்”, “நள்ளிழையாள்”, “விளங்கிழையாள்”, “ஆயிழை நங்கை” என, அவள் அணிந்திருக்கும் அணிகளோடு தொடர்பு படுத்தியே பாடியிருப்பது காண்க.

சேரன் செங்குட்டுவனுக்கும், இளங்கோவடிகட்கும் கண்ணகியின் வரலாறு கூறி, அவளுக்குக் கற்கோயிலும், சொற்கோயிலும் எழக் காரணமாக இருந்த சாத்தனார்க்குக் காட்சி அளித்த கண்ணகியும், ஒண்தொடியும், ஆய்தொடியும், சேயிழையும் அணிந்தே காட்சி அளித்துள்ளாள். “தண்டமிழ் ஆசான் சாத்தன் இஃதுரைக்கும்; ஒண்டொடி மாதர்க்கு உற்றதை எல்லாம் திண்டிறல் வேந்தே! செப்பக் கேளாய்; தீவினைச் சிலம்பு காரணமாக ஆய்தொடி அரிவை கணவர்க்கு உற்றதும் வலம்படுதானை மன்னன் முன்னர்ச் சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்” (சிலம்பு : 25 : 66-72) என்ற தொடர்களைக் காண்க.

ஆக, இதுகாறும் எடுத்துக் காட்டிய சான்றுகளால் சலதியோடு ஆடி, குலம் தருவான் பொருள் குன்றம் தொலைத்த இலம்பாடு போக்க, மதுரைக்குப் புறப்பட்டு விட்ட பின்னரும், கண்ணகி காதில் குழையும், தோளில் தொடியும், கைகளில் வளையும், காலில் பாடகமும் போலும் பல்வேறு அணிகளை அணிந்திருந்தாள்; ஆயிழை அணிந்த அவள் காட்சியை அவள் கணவன் கோவலனும், அவர்களுக்கு வழித் துணையாக வந்த கௌந்தி அடிகளாரும், அடைக்கலம் அளித்த மாதரியும், அவள் மகள் ஐயையும், மதுரைப் பெருமனைக் கிழத்தியரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/112&oldid=1789449" இலிருந்து மீள்விக்கப்பட்டது