புலவர் கா. கோவிந்தன்
107
மதுராபுரித் தெய்வமும், சேரன் செங்குட்டுவனும், ஆசிரியர் இளங்கோ அடிகளாரும், அவர் நண்பர் சாத்தனாரும் ஆகிய அனைவரும் கண்டு வந்துள்ளனர். ஆகவே, மாதவியோடு உறவு கொண்டு, அவளுக்குக் கொடுத்துக் கொடுத்துச் சிலம்பு ஒழிந்த பிற அணிகளையெல்லாம், கோவலன் இழந்து விட்டான் என்ற கூற்றில் உண்மையில்லை என்பது உறுதியாதல் அறிக.
“சாவதுதான் வாழ்வென்று தானம்பல செய்து
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ?”
—சிலம்பு : 29 : காவற்பெண்டுரை
கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்ட அவன் தந்தை, உலக வாழ்க்கையை வெறுத்துத் துறவறம் மேற்கொள்வதற்கு முன்னர்த் தன் கண் இருந்த வான் பொருள்களை, மாபெரும் தானமாக அளித்தான் என மாடல மறையோனும், காவற் பெண்டும் கூறுவன, குன்றெனக் குவிந்திருந்த குலச் செல்வத்தைத் தான் தொலைத்து விட்டதாகக் கோவலன் கூறியதன் பின்னரும், மாபெரும் தானம் என மதிக்கத் தகுமளவு வாரி வழங்கத் தக்க வான் பொருள், அவன் தந்தை பால் இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.
“கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி
மாபெரும் தானமா வான்பொருள் ஈத்து”
—சிலம்பு : 27 : 90-91
காலில் அணியும் அணிகளாகச் சிலம்பு, பாடகம், நூபுரம் போல்வன கூறப்படுமேனும், சிலம்பு மகளிர் மணப் பருவம் அடையும் வரையே அணியப்படும். மண விழாவின் போது, மணவிழா நாளின் முன்சாய நாளன்று,