108
சிலம்பொலி
அது அகற்றப்படும். அந்நிகழ்ச்சியைச் சிலம்புகழி நோன்பு என, மண நிகழ்ச்சிக்கு நிகரான நிகழ்ச்சியாகக் கொண்டு விழாக் கொண்டாடுவர்.
மகளிர் மணம் ஆகாதவர் என்பதை உணர்த்த அவர் காலில் சிலம்பு அணியப்படும். மணம் ஆன மகளிர், அது அணிவது இல்லை. மணப் பருவம் உற்று ஒருவனைக் காதலித்த நிலையில், பெற்றோர் அதற்கு இசையாமை அறிந்து, அவர் அறியாவாறு காதலன் ஊர் சென்று மணந்து கொள்ளத் துணிபவள், மனை விட்டு நீங்குங் கால், சிலம்பைக் கழற்றித் தாய் வீட்டில் வைத்து விட்டே செல்வள். மணம், மணமகள் வீட்டில் நிகழ்வது இயல்பு; மாறாக, அது மணமகன் லீட்டில் நிகழுமாயினும், அந்நிலையிலும், சிலம்புகழி நோன்பைத் தம் வீட்டில் நிகழ்த்தவே தாய்மார் விரும்புவர்.
பெற்றுப் பேரன்பு காட்டி வளர்த்த அன்னையும், மறத்து போகுமளவு வன்கண்ணளாகி விட்ட தன் மகள் சிலம்பைக் கழற்றிப் பிறந்தகத்தே வைத்து விட்டு, முன் பின் அறியானாகிய காதலனுடன் அவனூர் சென்று விட்டது கொடுமையினும் கொடுமை எனக் கண்ணீர் விடும் அகநானூற்றுத் தாயின் கூற்றிலும், (“சிறு வன்கண்ணி சிலம்பு கழிஇ, அறியாத் தேனத்தல் ஆகுதல் கொடிதே.”—அகம் : 385)—சிலம்புகழி நோன்பாம் சிறப்பினத் தான் கண்டு மகிழ்வதற்கு வாய்ப்பளிக்காது, பிறர் கண்டு. மகிழத், தன்னை விட்டுப் போய் விட்ட தன் ஆயிழை மகளை நினைந்து அழும் நற்றிணைத் தாயின் கூற்றிலும் (“சிலம்பு கழீஇய செல்வம், பிறர் உனக்கழிந்த என் ஆயிழை”-நற்றிணை: 279), காதலனுடன் சென்று விட்ட தன் மகளின் காற்சிலம்பு அகற்றும் விழாவினை, அக்காதலன் தாய், அவள் மனையிடத்தே கொண்டாடிய செய்தி கேட்டு, சிலம்புகழி நோன்பு என் மனையில்