இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புலவர் கா. கோவிந்தன்
109
நிகழ்ந்திருக்க வேண்டும். அதை உங்கள் மனையகத்தே நிகழ்த்திக் கொண்டீர்கள். மண விழாவினையாவது எங்கள் மனையில் நிகழ வழி விடுங்கள் என வேண்டும் ஐங்குறுநூற்றுத் தாயின் கூற்றிலும் (“தும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும், எம்மனை வதுவை நன்மணம் கழிக” - ஐங்குறு. 399) சிலம்புகழி நோன்பின் சிறப்பு மிளிர்வது காண்க.
ஆகவே, சிலம்பு, மணமான மகளிர் அணியப்படா நிலையில், வீட்டில் வீணே இருக்கும் ஓர் அணிகலன்; ஆகவே, தன்பால் வேறு பல அணிகள் இருக்கவும், அவையெல்லாம் அணியத் தக்கன. ஆகவே, அவற்றுள் எதுவும் தராது. வீணே இருக்கும் சிலம்பினைக் கொடுக்க முன் வந்தாள், கண்ணகி.