பக்கம்:சிலம்பொலி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவியைக் கோவலன் மன்னித்து

விட்டான்; ஆனால், கண்ணகி மன்னிக்கவில்லை கண்ணகி தென்னவனை மன்னித்து விட்டாள்; ஆனால், மாதவியை

மன்னிக்கவில்லை!

தன் கணவனை ஆராயாதே, கள்வன் எனக் குற்றம் சாட்டிக் கொன்றவன் தென்னவன்; இருந்தும் அது மன்னித்து, 'தென்னவன் தீதிலன்; தேவர் கோன் தன் கோயில் நல்விருந்து ஆயினான்; நான் அவன் தன் மகள்' (வாழ்த்துக் காதை) என அவனைத் தந்தையாகவும் கொண்டாள் கண்ணகி. -- -

கண்ணகியைக் 'குலப்பிறப்பாட்டி' (புறஞ்சேரி இறுத்த காதை: 89) என்றும், 'மாபெரும் பத்தினி' (மணிமேகலை: 2:55) என்றும் பாராட்டியவள் மாதவி. மேலும், கோவலனுக்கு நேர்ந்தது கேட்டுத் தான் துறவு பூண்டதோடு, தான் ஈன்ற மகள் மணிமேகலையைக் கண்ணகி மகளாகவே மதித்து, அதனால், அம்மகள், தன்னைப் போல் பரத்தையர் தொழில் மேற்கோடல் கூடாது என உணர்ந்து, 'மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்” (மணி மேகலை: 2:55-57) எனத் தன் வாயால் விளங்கக் கூறித் தன் மகளையும் துறவு பூணச் செய்தவள் மாதவி. "மாதவி மடந்தை நற்றாய் தனக்கு நற்றிற ம் படர்கேன் மணிமேகலையை வான்துயர் உறுக்கும் கணிகையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/119&oldid=560742" இலிருந்து மீள்விக்கப்பட்டது