பக்கம்:சிலம்பொலி.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

சிலம்பொலி

கண்ணகி, மாலைப் பொழுதின் கண்ணே, அவன் மெய்யின் புண்ணின்றும் குதிக்கின்ற குருதிப் புனல் இடமெல்லாம் நனைப்ப, அவன் தன்னைக் காணாத துயரத்தைத்தான் கண்டாள்” என அடியார்க்கு நல்லாரும் “காலைவாய்த் தழீஇக் கொண்டாள்; கொழுநன் குருதி புறஞ்சோரத் தன்னை அவன் காணாது கிடக்கின்ற கடுந்துயரத்தினை மாலைவாய்க் கண்டாள்” என அடியார்க்கு நல்லார் காலத்துக்கும் முற்பட்டவரான அரும்பத உரைகாரரும் விளக்கம் அளித்திருப்பதன் மூலம், “கொலையுண்டு கிடக்கும் கோவலனைக் கண்ணகி கண்ட மாலை, கோவலன் காலையில் தன்பால் விடை கொண்டு சென்ற அன்றைய மாலையில்தான்” என்பதே அவ்விரு உரையாசிரியர்களின் கருத்தாம் என்பது தெளிவாகிறது.

திரு.ம.பொ.சி. அவர்களும் இதை ஒப்புக் கொண்டுள்ளார். தம்முடைய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாகிய “சிலப்பதிகாரத் திறனாய்வு” என்ற நூலில், மூன்றாம் பதிப்பு, பக்கம் 123இல் இடம் பெற்றிருக்கும் “இளங்கோவின் மறதி” என்ற கட்டுரையில், பக்கம்: 124இல் “ஆம்; ஒரு நாள் காலைப் பொழுதில், தன் கணவனைத் தழுவி, அவன் சிலம்பு விற்று வர விடை கொடுத்தனுப்பிய கண்ணகி, அன்று மாலையில், தான் கண்டும் அவன் தன்னைக் காண முடியாது மாண்டு கிடப்பதைக் கண்டு, கடுந்துயர் கொண்டாள் என்றே பழைய உரையாசிரியர் இருவரும் ஒத்த கருத்தினராக உரைப்பாராயினர்” எனக் கூறியிருப்பது காண்க.

ஆனால், அவ்வாறு கூறிய அவர், அதே பக்கத்தில், “அவர்களுடைய உரைகள் மூலத்திற்கு ஒத்ததாகவே இருக்கின்றன. ஆனால், காலப் போக்கினை ஆராய்ந்து பார்க்குமிடத்து, மூலத்திலேயே முரண்பாடு இருக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/12&oldid=1774883" இலிருந்து மீள்விக்கப்பட்டது