116
சிலம்பொலி
உரைத்த காதை : 69-70] எனத் தன் வறுமை நிலைக்கு அவளே காரணம் என அவள் மீது குற்றம் சாட்டி மூன்றாவது முறையாகவும் தீர்ப்பு வழங்கிவிட்டான்.
இவ்வாறு ஒரு முறைக்கு மும்முறை, குற்றம் மாதவியதே எனத் தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், மதுரைப் புறஞ்சேரி சென்று புகு முன்னர், இடைவழியில், ஒருபுரி நூல் மார்பர் உறைபதிக்கண் இருந்தபோது, தன்னைத் தனிமையில் சந்தித்த கோசிகமாணி, கோவலனும், கண்ணகியும் புகார் நகர்விட்டுப் போய்விட்டது அறிந்து, மாசாத்துவான் உள்ளிட்ட அம்மாநகரத்து மாந்தர் உற்ற மாளாத் துயர் நிலை கேட்டு, மாதவி செயலிழந்து -வீழ்ந்து விட்டதையும், அவளைக் காணச் சென்ற தன் தாள் பணிந்து, கோவலன்பால் சென்று சேர்க்குமாறு வேண்டித் தன் கை இது கொடுத்தாள் எனக்கூறி, அவன் கொடுத்த அவள் கடிதத்தில் குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையராகவும், தூய உள்ளம் உடையராகவும் இருந்து நடந்துவிட்டனவற்றை ஆராய்ந்து நோக்கினால். தவறு என்பால் இல்லை என்பதைத் தெற்றென உணர்லாம். அத்தகு நிலைநின்று நோக்குதல் வேண்டும் என்பதைக் கூறாமல் கூறுவாள் போல், தன்னைப் "பொய் தீர்காட்சிப் புரையோய்" ஏன விளித்தவள், அதில் அவளைப் பற்றி ஏதும் கூறிக் கொள்ளாமல், குரவர்பணி ஆற்ற வேண்டியதன் கடமையை ஆற்றத் தவற நேர்ந்து விட்டதற்கும், மனைப்புறம் போந்து அறியா மனையாளைக் காட்டு வழியில்-அதிலும் கொடிய காரிருளில் கொண்டு செல்ல நேர்ந்து விட்டதற்கும் வருந்தி, அக்கொடுஞ்செயலுக்கு அவள் காரணமாகாள் என்பதை ! அவள்: உள்மனம் உறுதியாகக் கூறுவதால், அக்கொடுமைக்கு யாதுதான் காரணம் என்பதை அறிந்து கொள்ளத் துடிக்கும் அவள் உள்ள நிலையை உணர்த்தி,