புலவர் கா.கோவிந்தன்
119
இத்திறம் கேட்பல்" (ஊர்சூழ்வரி: 3,45,49,58,71), "அறிவதை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை விழைத்தோன் வாயிலோயே!" (வழக்குரை காதை: 25-26) என்றெல்லாம் கூறித் தவறுபுரிந்து விட்டான் தென்னவன் எனத் தெளிவான தீர்ப்பை வழங்கி விட்டாள் கண்ணகி.
அம்மட்டோ? கள்வனைக் கொல்வது கடுங்கோலா காது, அதுதான் அரச நீதி- "கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று; வெள்வேல் கொற்தம் காண்"-எனத் தென்னவன் கூறக் கேட்டதுமே "நற்றிறம் படராக் கொற்கை வேந்தே!" (வழக்குரைகாதை: 64-6) என அவளை முன்னிலைப் படுத்தி, நேருக்கு நேராகவே தீர்ப்பு வழங்கி விட்டாள்.
இவ்வாறெல்லாம் தீர்ப்பு வழங்கி விட்ட காரணத்தால், அவன் அரசவை புகுந்து, கணவன் கள்வனல்லன் என்பதைக் காற்சிலம்பு கொண்டு நாட்டி விட்டதும், "குற்றம் புரியாதவனுக்குக் கொலைத்தண்டம் கொடுத்து விட்டேனே!" என்ற குற்ற உணர்வு உள்ளத்தை உருக்குலைக்கவே, அந்நிலையே உயிர் விட்ட தென்னவன் செங்கோல் நலத்தை நேரில் கண்டும், தன் சுணவனுக்குத் தவறு இழைத்த தென்னவன் மட்டுமேயல்லாமல், அவன் பிறந்த தென்னவர் குடியே குற்றம் புரியாப் பெருமையுடையது என்பதைக், கீரந்தை மனைவி, வார்த்திகன் மனைவி ஆகியோர் வரலாறுகள் மூலமாக விளக்கி, முடிந்த முடிபாகத், தென்னவர், "மறை நா ஓசை அல்லது. யாவதும் மணிநா ஓசை கேட்டதும் இலனே; அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது குடிபழிதூற்றும் கோலனும் அல்லன்" (கட்டுரை காதை: 31-34) என மதுராபுரித் தெய்வம் கூறக் கேட்டுத் தென்னவன் தீதிவன் என்பதை உணர்ந்து கொண்டமையால், இவ்வுண்மையினை உணர்ந்துகொள்ள இயலாதநிலையில்,