120
சிலம்பொலி
குற்றம் புரிந்து விட்டான் தென்னவன் எனத் தான் அளித்துவிட்ட தவறான தீர்ப்பை மறுத்து நல்ல தீர்ப்பு வழங்கவேண்டிய இன்றியமையாக் கடமை-ஆராயாதே தீர்ப்பு வழங்கிவிட்ட தன் தவறுக்குக் கழுவாய் தேடி வேண்டிய கட்டாயம்-கண்ணகிக்கு நேர்ந்து விட்டது. அதனால், "தென்னவன் தீது இலன். தேவர் கோன் தன் கோயில் நல்விருந்து ஆயினான்: நான் அவன்தன் மகள்” (வாழ்த்துக்காதை) என்ற தெளிவான தீர்ப்பை வழங்கினாள்.
தென்னவன் பொருட்டு, அத்தகைய தீர்ப்பு அளிக்க வேண்டி நேரிட்டது போன்ற நெருக்கடி, மாதவியைப் பொறுத்தவரையில் கண்ணகிக்கு வாய்க்கவில்லை. தவறு மாதவியினுடையது என்ற தவறான தீர்ப்பினை ஆராயாதே வழங்கி விட்டுப் பின்னர், உண்மை தெளிந்து, "அவள் தீது இலள்” என மறு தீர்ப்பு வழங்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்ட கோவலன் நிலையும் கண்ணகிக்கு நேரவில்லை.
மாதவியைச் “சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக் குலம் தரு வான் பொருள் குன்றம் தொலைந்த இலம்பாடு” (கனாத்திறம் உரைத்த காதை: 69-71) எனக் கண்ணகி எதிரில் குற்றம் சாட்டியவன், புகார் நகரை விட்டுப் புறப்பட்டு, காட்டுவழியெல்லாம் கடந்து சென்று புறஞ்சேரியில் இருந்தபோது கோசிகமாணி, புகார் நகரத்து நிகழ்ச்சிகளை யெல்லாம் விளக்கி விட்டுக் கொடுத்த மாதவியின் கடிதத்தைக் கண்ணுற்ற பின்னரே, மாதவி குற்றமற்றவள் என்பதை உணர்ந்து கொண்டு, 'தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி என் தீது என்றே எய்தியது உணர்ந்து" புறஞ்சேரி