பக்கம்:சிலம்பொலி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தன்

121

இறுத்த காதை 94-95) என்று கூறி, மாதவி குற்றம் அற்றவள் என்பதை ஏற்றுக் கொண்டான்.

மாதவியொடு பல்லாண்டு பழகி, அவள் பண்பு நலனெல்லாம் உணர்ந்திருந்த அவனுக்கு, அவள் தீதற்றவள் என்பதை உணர்ந்து கொள்ள, அவ்வளவு நாட்கள் தேவைப்பட்டன; கோசிகமாணியின் துணையும் வேண்டியிருந்தது.

தன் கணவன் மாதவியோடு உறவு கொண்டு உலா வந்த ஊரிலேயே வாழ்ந்திருந்தவள் தான் கண்ணகி. ஆனால், மாதவியைக் கண்ணாலும் கண்டறியாதவள். ஆயினும், கணவன் தன்னைப் பிரிந்து, மாதவியோடு இருப்பதற்கு, இம்மாதவி காரணமாகாள்; அக்குற்றம் புரிபவன் தன் கணவன் கோவலனே என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்தாள். அதனால்தான் மாதவியைப் பிரிந்து, தன் மனை புகுந்த கோவலன், மாதவியைச் "சலதி" என்றும் "அவளோடு ஆடி வான் பொருள் தொலைத்தேன்' என்றும் கூறிய அவன் கூற்றை ஏற்றுக் கொண்டாள் அல்லள். மாறாக, அது பரத்தையர் தொடர்புடைய விடவர் கூறும் வழக்கமான சொல்; மனைவியர் முன்ன பரத்தையரைப் பழித்தால் மனைவியர் மகிழ்ந்து போவர் என்ற பேதைமை காரணமாகக் கூறும் பொய்யுரை; அதில் உண்மை இல்லை என்றே கொண்டாள். அதை உணர்த்தவே, அவன் சொல் கேட்டுச் சிறிதே நகை காட்டினாள். "நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி"...(கனாத்திறம் உரைத்த காதை.72)

நகை, எட்டு நிலைகளில் தோன்றும் 1. பிறரைத் தான் எள்ளும்போது, 2. பிறர் தன்னை எள்ளும்போது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/127&oldid=1801356" இலிருந்து மீள்விக்கப்பட்டது