புலவர் கா. கோவிந்தன்
7
காண்கிறோம்” என்றும் கூறி, இளங்கோவடிகள் மீதான குற்றச்சாட்டினை மெல்லத் தொடங்கி வைத்துள்ளார்.
அவ்வாறு பையத் தொடங்கிய குற்றச்சாட்டினை, "அந்த மகாகவியும் ‘மறதி’ என்னும் குறைபாட்டிற்கு இரையாகி விட்டாரோ என்று ஐயுறத்தக்க வகையில் ஒரு சிக்கல் சிலப்பதிகாரத்தில் காணக் கிடக்கிறது" [பக்கம் 123] என்றும், "இளங்கோவடிகள் பெரும் புகழ் பெற்ற மகாகவியாக இருந்தும், யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல், அவருக்கும் மறதி ஏற்பட்டது போலும்” [பக்கம்: 131] என்றும் கூறி, இளங்கோ அடிகள் கூற்றில் ஐயுற்றது போல, அடக்கவுணர்வோடு குற்றம் சாட்டி வைத்தார்.
இவ்வாறு இரண்டாங் கட்டத்தில் ஐயவுணர்வோடும் அடக்கவுணர்வோடும் குற்றம் சாட்டியவர், 142, 143ஆம் பக்கங்களில், “மாதரி இல்லத்தில் புகுந்த மறுநாள், கண்ணகி கோவலனுக்கு உணவு சமைத்துப் படைத்தாள் என்பதும், உணவை உண்டு முடித்ததுமே, கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்து சென்றான் என்பதும், அன்று மாலையே கோவலன் கொலையுண்டான் என்பதும், அன்றிரவெல்லாம் கோவலன் வாராமையால், கண்ணகி உள்ளம் வெதும்பி, உறக்கம் இன்றி வருந்தினாள் என்பதும், மறுநாள் காலையில், உற்பாதங்களைக் கண்ட அச்சத்தால் ஆய்ச்சியர் குரவைக் கூத்து நடத்தினர் என்பதும், அக்கூத்தின் முடிவில்தான், கோவலன் கொலையுண்ட செய்தி கண்ணகிக்குக் கிடைத்தது என்பதும், அதனை அறிந்ததுமே, அவள் கோவலன் கொலையுண்ட இடம் சென்று, அவனுடைய உடலைக் கண்டாள் என்பதும், உறுதி செய்யப் படுகின்றன” என்றும், பக்கம் : 124இல் “கண்ணகியிடம் விடை பெற்றுச் சென்ற அன்றே கோவலன் வெட்டுண்டான். ஆயினும்,