பக்கம்:சிலம்பொலி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சிலம்பொலி

அன்று மாலையே கண்ணகி கொலைக் களத்தில் அவனைக் காணவில்லை; மறுநாள் மாலைதான் காண்கி றாள். ஆகவே, ஒரு நாள் காலையில் கோவலனுக்கு விடை கொடுத்து அனுப்பியவள் அன்று மாலையே அவனைப் பிணமாகக் கண்டாள் என்று இளங்கோ அடிகள் கூறுவது மறதியின் பாற்பட்டதே' என்ற முடிவான தீர்ப்பினை வழங்கிவிட்டார். -

அவ்வாறு முடிவான தீர்ப்பினை வழங்கிவிட்ட திரு. ம. பொ. சி. அவர்கள் (பக்கம் : 142) தம் குற்றச் சாட்டிற்கு வலுவேற்ற, சான்று ஒன்றினையும் தேடிப் பெற்றுக் காட்டியுள்ளார்-டாக்டர் வ. சுப. மாணிக்கம் அவர்கள் வெளியிட்டுள்ள "இரட்டைக் காப்பியங்கள்’’ என்ற நூலில். 'முதல் நாள் மாலை கோவலன் இறந் தான்; மறுநாள் காலை, கண்ணகி அத்துயரச் செய்தியை அறிந்தனள் என்பது தெளிவு. அறிந்த பின் அலறிப்பதறிக் கொலையிடம் விரைகின்றாள். ஆனால், காலையில் கணவனைத் தழுவி வழியனுப்பியவள், மாலையில் அவன் தன்னைக் காணாத நிலையில்தான் கண்டாள் எனக் கூறிக் கண்ணகியின் அழுகைப் பெருக்கையும். அவலப் பெருக்கையும் காட்டுவதற்காக, இவ்வொரு நாளை ஆசிரியன் பலியிடுகின்றான்” என திரு. வ. சுப. மாணிக்கம் அவர்கள் கூறுவதைக் காட்டுவதே இந்த வலுவான சான்று.

இதனால், கோவலன் உணவுண்டு சென்றதும், கொலை யுண்டதும், ஆய்ச்சியர் குரவை ஆடியதும், கொலையுண்ட கணவனைக் கண்ணகி கண்டதும் ஆகிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு நாள் நிகழ்ச்சிகள் ஆகா, கோவலன் உணவுண்டு சென்றதும், கொலையுண்டதும் ஒரு நாள் நிகழ்ச்சிகள்; ஆய்ச்சியர் குரவை ஆடியதும், கொலை யுண்ட கணவனைக் கண்ணகி கண்டதும், மறுநாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/14&oldid=560637" இலிருந்து மீள்விக்கப்பட்டது