பக்கம்:சிலம்பொலி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் If

கூறியுள்ளார். ஆகவே, இப்பாட்டில் வரும் காலையும், மாலைக்குப் பின் ஒர் இரவு இடைவந்து கழிந்துபோகப்

பின்னர் வந்த காலையையே குறிக்கும். "மாலைவாரார் ஆயினும், காலை காண்டுவம்” எனவரும் சிலப்பதிகாரத் தொடரும் அத்தகையதே.

மாதவி பாடிய கானல்வரிப் பாடல் கேட்டு, "மாயப் பொய்காட்டும் மாயத்தாள், வேறுஒன்றின்பால் மனம் வைத்துப் பாடினாள்' என அவளைப் பழித்து விட்டு, ஏவலாளர் சூழ்ந்து வரக் கோவலன் போய்விட்டானாகத் தனித்து மனைபுக்க மாதவி,பிரிவுத் துயர் மறக்க, யாழ் எடுத்துப் பல்வேறு இசைக்கருவிகளை எழுப்பியும் துயர் தணியாதாகத் தன் துயர்க் கொடுமை. களையெல்லாம், பண்ணிப் பண்ணி எழுதிய கடிதத்தை வசந்தமாலை கைக்கொடுத்து, அதைக் கொண்டு. போய்க் கோவலன்பால் அளித்து, அவனைக் கொணர்க. எனப் பணித்து அனுப்ப, அது பெற்ற வசந்தமாவை, கூலமறுகிற்குச் சென்று, கோவலன்பால் நீட்ட, அவன் மாதவியை ஆடல் மகள் எனப் பழித்து, நீட்டிய கடிதத்: தினை வாங்கவும் மறுத்து விட்டானாக, வசந்தமாலை. மாதவியால் மீண்டு, நடந்தது கூறக்கேட்ட நிலையில், மாதவி கூறிய, "மாலை வாரார் ஆயினும் காலை காண்டுவம்" என்ற கூற்றில், மாலை முன்வர, அடிகளார் பாடியிருக்கும் நில்ைவேறு. ஆங்கு மாலை முன் நிற்கிறது: காலை பின் நிற்கிறது; அந்நிலை வேறு. - :

ஆனால், ஆயர்பாடியில், கோவலனைத் தழுவி, அவன் முடியில் சூடியிருந்த மலரைத் தன் கூந்தவில் அணிந்து கொண்டு, காலையில் வழியனுப்பிய கண்ணகிக வந்து நிற்கும் தன்னையும் காணமாட்டா நிலையில், புண்ணிலிருந்து செங்குருதி சொட்டச் சொட்டக் கொலையுண்டு வீழ்ந்து கிடக்கும் கோவலனை, "மாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/17&oldid=560640" இலிருந்து மீள்விக்கப்பட்டது