பக்கம்:சிலம்பொலி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சிலம்பொலி

“பொழுது விடிந்து கெடுநேரத்திற்குப் பின்பு, கிட்டத் தட்டப் பகல் நேரத்தில்தான் கண்ணகி படைத்த உணவைக் கோவலன் உண்டிருக்க வேண்டும்”
என்கிறார் ம. பொ. சி. [பக்கம் : 140]

அடியார்க்கு நல்லார், “நாள்வழிப் படூஉம் அடிசில்” (சிலம்பு : 16 : 19) என்ற தொடருக்குப் “பகற் போதே உண்ணும் அடிசில்” எனக் கூறும் உரையும், “நண் பகற். போதே நடுங்கு நோய் கைம்மிகும்” (சிலம்பு : 18 : 16) என்பதற்குக் “கோவலன் போன போதே தன் நெஞ்சு கலங்குதலால் நண்பகற் போதே என்றாள்” என அளிக்கும் விளக்க உரைகளே, ம.பொ.சி. அவர்களை, அம்முடிவிற்கு வரச் செய்திருக்க வேண்டும்.

சிலப்பதிகாரத் திறனாய்வு மேற்கொள்வார், அது மேற்கொள்வதன் முன்னர்,.

சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசில்
ஆக்குதற்கு அமைந்தநற் கலங்கள்
நெடியாது அளிமின் நீர்எனக் கூற
இடைக்குல மடந்தையர் இயல்பில் குன்றா
மடைக்கலம் தன்னொடு மாண்புடை மரபின்
கோளிப்பாகல் கொழுங்கனித் திரள்காய்;
வாள்வரிக் கொடுங்காய்; மாதுளம் பசுங்காய்,
மாவின் கனியொடு வாழைத் தீங்கனி
சாலி அரிசி தம்பாற் பயனொடு
கோல்வளை மாதே! கொள்கெனக் கொடுப்ப
மெல்விரல் சிவப்பப்
, பல்வேறு பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத்
திருமுகம் வியர்த்தது, செங்கண் சேந்தன;
கரிபுற அட்டில் கண்டனள் பெயர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/20&oldid=1775207" இலிருந்து மீள்விக்கப்பட்டது