பக்கம்:சிலம்பொலி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இலம்பொலி

எனஅளிக்கும் அடியார்க்கு நல்லாரின் தவறானவிளக்கமே

ம.பொ.சி. அவர்களை அடி சறுக்க வைத்திருக்க வேண் டும். அடியார்க்கு நல்லார் கூறும் அவ்வுரை விளக்கம்,

இளங்கோவடிகளாரின் உள்ளம் உணராது கூறிய தவறான விளக்கமே ஆம்.

சிலப்பதிகாரப் பொருளைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு அடியார்க்கு நல்லார் உரையே துணையா கும் என்றாலும், அவ்வுரையும் சிற்சில இடங்களில் தடம் புரண்டு ஒடியுளது என்பதை மறைப்பதற்கில்லை. ம.பொ.சி. அவர்களும் இதை ஒப்புக் கொண்டுள்ளார்: உழையோர் இல்லா ஒரு தனி கண்டு” என்ற தொட ருக்கு, 'ஆய்ச்சியர் எல்லாம் குரவையாடச் சென்றமை தோன்ற' என்று அடியார்க்கு நல்லார் உரை கூறினார் என்றால், அதனை மூலத்திற்குப் பொருந்தா உரை என்றே கொள்ள வேண்டும்" (பக்கம்: 137) என அவர்கள் கூறியிருப்பது காண்க.

'நீட்டித்து இராது நீ போ" எனக் கெளந்தி அடி களின் ஆணையிற் கண்ட விரைவினை உணர்ந்த மாதரி, கண்ணகியோடு மனை புகுந்த அடுத்த கணமே, அவர்கள் இருத்தற்கேற்ற இடம் அளிப்பது, கண்ணகிக்கு நீராட்டி விடுவது, தன் மகள் ஐயையைத் துணையாக அளிப்பது, கோவலன் சாவக நோன்பி என்பதறிந்து, நாள் வழிப்படும் அடிசில் ஆக்குதற்கு வேண்டும். பொருட் களை "நெடியாது அளிமின்' என ஆணையிடுவது ஆயர்மகளிரும் அவற்றை அப்போதே அளிப்பது, அவை கொண்ட கண்ணகி அட்டில் தொழிலை அட்டியின்றித் தொடங்குவது ஆகிய இந்நிகழ்ச்சிகள் விரைந்து நடை பெறுதல் வேண்டும் என்ற உணர்வோடு, இளங்கோவடி களார் சொற்களை ஆண்டிருக்கும் விரைவு, அடியார்க்கு நல்லார் உரைக்கு ஆதரவு அளிப்பதாக இல்லை. அட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/24&oldid=560647" இலிருந்து மீள்விக்கப்பட்டது