பக்கம்:சிலம்பொலி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - சிலம்பொலி

கோவலன் முந்திய நாளே மதுரை சென்று பொன் வணிகர் வீதி, பொற்கொல்லர் வீதிகளை அறிந்து வந்தவ னாதவின், பொற்கொல்லனைத் தேடி அலைவதில் காலம் செலவிடத் தேவையில்லை. அதனால்தான் கடைவீதியுள் துழைந்தவுடனே, "பொன்வினைக் கொல்லன் இவன் எனப் பொருந்தி' (சிலம்பு : 2 : 110) பொற்கொல்லனை அடையாளம் கண்டு, "காவலன் தேவிக்கு ஆவதே காற்கணி, நீ விலையிடுதற்கு ஆதியோ?"சிலம்பு: 26:111-112 எனக் கேட்டு அவன்பால் சிலம்பைக் கொடுத்துவிட்டான்.

தான் செய்த களவு, அரசனுக்குத் தெரிந்து விடு முன்னரே, கோவலனைக் குற்றவாளியாக்கிக் கொன்று விட வேண்டும் என்பதில் விரைவு காட்டினான் பொற். கொல்லன், கோப்பெருந்தேவி கோயிலுக்குச் செல்லும் மன்னவன் அரசவை திரும்பும்வரை காத்திருக்கவும் விரும்பவில்லை; கோப்பெருந்தேவியின் கோயில் வாயி லுக்கே சென்று விட்டான். அது போலவே, கோவலன் தோற்றப் பொலிவுகண்டு, இவன் கள்வன் ஆகான் என்ற காவலன் ஐயத்தைப் போக்குவதிலும் விரைவு. காட்டினான். -

. கோயில் சிலம்பு கொண்ட கள்வன் என் சிறுகுடில் அகத்துளான்" எனப் பொற்கொல்லன் கூறக் கேட்ட அளவே, கோப்பெருந்தேவியின் ஊடலைத் தணிக்க வேண்டும் என்ற வேட்கை மிகுதியால், பொற்கொல்லன் கூறியதன் உண்மை அன்மைகளை ஆராய எண்ணாதே, ஊர் காப்பாளரைக் கூவிக், "கொன்று சில்ம்பு கொணர்க" என ஆணை பிறப்பிப்பதில் மன்னனும் விரைவு, காட்டினான். ~. - - ** -

ஆகவே, கோவலன் பொற்கொல்லனைக் கண்டதும் பொற்கொல்லன் அரசனைக் கண்டதும், அரசன் ஆணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/28&oldid=560651" இலிருந்து மீள்விக்கப்பட்டது