பக்கம்:சிலம்பொலி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 25.

நண்பகற் போதில் என்றும் கொண்ட கருத்துக் குழப்பமே இதற்குக் காரணம். குரவை ஆடிய அன்றைய பால்தான் உறையவில்லை; நெய்தான் உருகவில்லை; அதற்கு முந்திய நாள் பால் உறையவில்லை; நெய் உருகவில்லை. எனக் கூறப்படவில்லை. உணவிற்காம் பொருள்களை முந்திய நாள் இரவே கொடுத்து விட்டார்கள். அவை கொண்டு ஆக்கிய உணவை விடியற் காலையிலேயே உண்டான் என்று கொண்டால், பால் உறையாத போதும் நெய் உருகாத போது, தயிரும் நெய்யும் எவ்வாறு தந்திருக்க இயலும் என்ற வினா எழுதற்கே இடமில் லாமல் போகும்.

கோவலன் முதல்நாள் உணவுண்டு சென்று கொலை யுண்டு போனான்; மறுநாள் பால் உறையாமை முதலாம் உற்பாதம் கண்டு ஆய்ச்சியர் குரவை ஆடினர் என்று கொள்வதில், இயற்கை நியதிக்கு ஒவ்வாத ஒரு முரண் பாடு இடம் பெறுவதை ம. பொ. சி. உணர்ந்திலர் போலும்.

உற்பாதங்கள், வர இருக்கும் கேட்டினை உணர்த்த முன்கூட்டி நிகழ்வது இயற்கையே யல்லாது, கேடு வந்து விட்ட பின்னர் நிகழ்வது இயற்கை அன்று. புகார் நகரத் தில் கண்ணகி கண்ட தீக்கனவும், புறஞ்சேரியில் கோவலன் கண்ட தீக்கனவும் கொலை நிகழ்ச்சிக்கு முன் நிகழ்ச்சி களாதல் அறிக. அது போலவே, பாண்டிமாதேவி கண்ட தீக்கனவும், பாண்டியன் உயிர் இழந்து வீழ்தற்கு முன் நிகழ்ச்சி ஆதலும் அறிக. 'பாண்டி மாதேவி முன்னாள் இரவில், தான் கண்ட தீய கனவினை அரசர்க்கு உணர்த்த எண்ணி அரசவை புகுந்தாள்” (பக்கம்: 128) எனக் கூறுவ தன் மூலம், திரு. ம. பொடு சி. அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/31&oldid=560654" இலிருந்து மீள்விக்கப்பட்டது