28
சிலம்பொலி
ம.பொ.சி. அவர்களும் இதை உணராமல் இல்லை. கோவலன் கொலையுண்ட மறு நாள்தான், கண்ணகி அவன் உடலைக் கண்டாள் என்ற தம் வாதத்திற்குத் தடையாகக், “குரவைக் கூத்துக்கு முதல் நாள் மாலையிலேயே கோவலன் கொலையுண்டான் என்றால், அன்றிரவில் பிரிந்து சென்ற கோவலன் வரக் காணாமைக்கு வருந்தாமல், அமைதியாகக் கழித்திருப்பாளா கண்ணகி? கழித்திருப்பாள் என்று நம்புவது கண்ணகியின் கற்புக்கு இழுக்குக் கற்பிப்பது ஆகாதா? என்றெல்லாம் கேட்கப் படுகிறது” [பக்கம் 135] எனக் கூறி விட்டு, அதற்கு விடையாக, “கோவலன் தன்னைப் பிரிந்து சென்ற நாளில்—குரவைக் கூத்து நிகழ்வதற்கு முதல் நாளில்—இரவில், கண்ணகி உள்ளம் குலைந்தாள்; மனம் வருந்தி வெதும்பினாள்” [பக்கம் 135] என்று கூறி, அதற்கு ஆதாரமாக,
“காதலற் காண்கிலேன்; கலங்கிநோய் கைம்மிகும்
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே;
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின்,
ஏதிலார் சொன்னது எவன்?வாழி யோ!தோழி!
நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும்
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே;
அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின்,
மன்பதை சொன்னது எவன்?வாழி யோ!தோழி!
தஞ்சமோ தோழி!தலைவன் வரக் காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே;
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்னது எவன்?வாழி யோ!தோழி!“”
என்ற இப்பாக்களைக் காட்டி, “”இங்கு ஒர் இரவு கோவலன் வரத் தவறியமைக்கு, அந்த இரவில் அவள்