32
சிலம்பொலி
கொடுத்து அனுப்பிய போது கலங்கவில்லை. கொலைச் செய்தியைக் குறிப்பால் அறிந்து கொண்ட நண்பகற் போதிலேயே கலங்கினாள் என உணர்க.
கோவலன் கொலையுண்டது, பொற்கொல்லன் சிறுகுடிலை அடுத்திருந்த ஒரு தேவ கோட்டம். அது மதுரை மாநகரில், பெருவாணிகம் நிகழும், மக்கள் நடமாட்டம் மிக்க இடமாதல் வேண்டும். மேலும், மதுரை ஒரு பெருநகரமாதலின் அங்குக் கம்பலை மாக்கள் பெருகியிருப்பர் என்பதில் ஐயம் இல்லை. கம்பலை மாக்களாவார், “வேறு சில காட்சி கண்டு திரியுமவர்” என்கிறார் அடியார்க்கு நல்லார். கோவலன் உடலை அக்கம்பலை மாக்களே கண்ணகிக்குக் காட்டினர். “கம்பலை மாக்கள் கணவனைத் தாம் காட்ட, செம்பொற் கொடியனையாள் கண்டாள்” என்கிறார் இளங்கோவடிகளார். மேலும் கொலைச் செய்தியை இளங்கோவடிகளார் “ஊர் அரவம்” என்கிறார். அரவம் என்றால் பேரொலி என்பது பொருளாம். ஆகவே, கொலைப் பேச்சு மக்கள் அனைவராலும் பேசப்பட்டது எனத் தெரிகிறது. ஆகவே, கம்பலை மாக்கள் நிறைந்த ஒரு மாநகரத்தில், மக்கள் நடமாட்டம் மிக்க ஓரிடத்தில், நிகழ்ந்து விட்ட ஒரு கொலை நிகழ்ச்சி, இது நிகழ்ந்த சிறு பொழுதிற்கெல்லாம் நகர் முழுதும் பரவியிருக்கும். அங்ஙனமாக, அன்று பகலும், இரவும் தெரியாதிருந்தது; மறுநாள் பிற்பகல், நண்பகற் போதில்தான் தெரிந்தது என்பது நம்பக் கூடாத ஒன்று.
ஆயர்பாடி விட்டுப் புறப்பட்ட கோவலன், தாதெரு மன்றம் கழித்து, மாதர் வீதி மறுகிடை போய், பீடிகைத் தெருவில் அடியிட்டதும், பொற்கொல்லனைக் கண்டு கொண்டான். ஆகவே, பொற்கொல்லன் சிறுகுடில் இருந்த இடம், ஆயர்பாடிக்கு வெகு தொலைவில் இருந்-