பக்கம்:சிலம்பொலி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 35,

வேண்டலும், பொற்கொல்லன் அரசனைக் கண்டு, கோவலனைக் கள்வன் எனக் கூறலும், அரசன் ஆணை பிறப்பித்தலும் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று, இறுதி யில் கோவலன் கொலை செய்யப்படுதல் குரவை முடி விற்குச் சற்று முன்னாக நிகழ்ந்திருத்தல் வேண்டும்.

இவ்வாறு கொள்வதால், கோவலன் உணவுண்டு சென்று கொலையுண்டு போதலும், ஆய்ச்சியர் குரவை ஆடலும், கண்ணகி கொலையுண்ட கணவனைக் காண லும் ஆகிய இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு நாள் நிகழ்ச்சிகளே என்பதற்குத் தடையாகக் கூறக் கூடியது எதுவும் இல்லை என்பதும், அதனால், காலையில் கண வனைத் தழுவி, அவன் முடி மாலையைத் தன் கூந்தலில் சூட்டிக் கொண்டவள், அன்று மாலையே கணவனின் கொலையுண்ட உடலைக் கண்டாள்.

"வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல் மேல்

கொண்டாள் தழி இக்கொழுநன்பால், காலைவாய்ப்

புண் தாழ் குருதி புறம் சோர மாலைவாய்க் கண்டாள், அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம்" எனக் கூறுவதில் எந்த விதமான முரண்பாடும் இல்லை. என்பதும், ஆகவே, இளங்கோவடிகளார் மறந்தும் அடிசறுக்கிப் போகவில்லை; மாறாக, விழிப்போடிருந்து அடி ஊன்றி நின்றே நிகழ்ச்சிகளைக் கூறியுள்ளார்: சொற்களையும் ஆண்டுள்ளார் என்பதும் உறுதி செய்யப் படுவது அறிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/41&oldid=560664" இலிருந்து மீள்விக்கப்பட்டது