பக்கம்:சிலம்பொலி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாதவி தொடர்பாகவே பொருளழித்து வறுமையுற்றுக் கைப்பொருள் இழந்து நிற்கும் நிலை கோவலனைக் கானல் வரிக்கு முன்பே அலைக்கழிக்கத் தொடங்கி விட்டதை மாதவியும் உணர்ந்திருந்தாள் என தெ.பொ.மீ. அவர்கள் கூறுவது பொருந்துமா?

“குளிப்பதற்குக் கொள்ளைப் பொன்; அணிவதற்கும் ஆயிரம் ஆயிரம்; அம்மம்ம செலவினை எப்படிக் கணக்கிடுவது?” [பக்கம் : 4]

“பொழிலாட்டும் நாண்மகிழ் இருக்கையும் பூமலி கானத்துப் புதுமண நுகர்வும், நகையாடாயமும், பாணருடனும், பரத்தருடனும் திளைத்து வருதலும் எல்லாம் பகட்டே ஆம். பகட்டு என்றால் பண ஒட்டந்தானே?” [பக்கம் : 3]

“காமக்களி மகிழ்வு. பொழிலாட்டு, நாண் மகிழ் இருக்கை, புதுமணம் புகுதல், நகையாடாயத்து நன்மொழி திளைத்தல் என்ற வகையில், பாணரொடும் பரத்தரொடும் திரிவதே மாதவிச் சூழலில் கோவலன் இயல்பாயிருக்கிறது. இதைத் தானே மாதவியும் காண்கிறாள்” [பக்கம் : 52]

“எதனையும் எதிர்த்துப் போராடும் உறுதி படைத்தது மாதவியின் மனம்; பரத்தை வாழ்வை மறுத்துக் கற்பு வாழ்வை மேற்கொண்டு, தாயையும் எதிர்த்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/42&oldid=1775777" இலிருந்து மீள்விக்கப்பட்டது