பக்கம்:சிலம்பொலி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 37

மாதவியின் மனம்;...ஆனால் அவளது அத்தகைய எதிர்ப்பு, ஆரவாரத்தை எதிர்க்க, கானல் வரி பாடும் வரை இன்னமும் எழவில்லை." (பக்கம் : 31

“கைப் பணம் இல்லாத கலக்கம், அவனுடைய காதல் வாழ்வைச் சிதைக்கத் தொடங்கியது என்பதில் ஐயம் நமக்கு எழுவதற்கு இடம் இல்லை." (பக்கம் : 21

'கைப் பணம் இல்லாத போது கசப்பெழுந்ததும், கைப்பணம் கேட்கும் சூழலையே கசந்து கொள்கிறான் கோவலன்...வாழ்க்கைக்கு வழி என்ன என்று கலங்கிப் புண்பட்ட கோவலன் மனம், இவ்வாறெல்லாம் கானல் வரிக்கு முன் ஊசலாடுகிறது.’ (பக்கம் : 32)

"கைப் பொருள் இன்மையே கோவலன் கருத்தைக் கலக்குகிறது .மாதவிக்குத் தெரியுமா இந்த மனப். புழுக்கம்?" (பக்கம் : 1) . -

"கோவலன் செல்வத்தை இழந்த நிலையை நாம் அறிவோம். அதனைப் பற்றி மாதவியும் எண்ணியிருத்தல் வேண்டும். மாதவியிடம் குறிப்பாக அவன் சுட்டி யிருக்கலாம்." (பக்கம் : 237)

'கானல்வரி” என்ற தம் நூலில் தெ.பொ.மீ, அவர்கள் சிதற விட்டிருக்கும் அவர் எண்ணங்கள் இவை, இவ்வாறெல்லாம் கருத்துக்களைத் தெரிவித்திருப்பதன் மூலம், தெ.பொ.மீ. அவர்கள் 1. மாதவிக்காகச் செல விட்டே கோவலன் வறியனாகி விட்டான். 2. கோவலன் வரையறை யற்றுச் செலவழிப்பதை மாதவியும் அறிந் திருந்தாள். 3. ஆனால் கோவலனின் அவ்வாரவார வாழ்க்கையை அவள் எதிர்க்கவில்லை. 4. கைப் பணம் இல்லாமை கோவலன் காதல் வாழ்வைச் சிதைக்கத் தொடங்கி விட்டது. கானல்வரிக்கு முன்னரே,வாழ்க்கைக்கு வழி என்ன என்று கலங்கிப் புண்பட்டு

சில-3 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/43&oldid=560666" இலிருந்து மீள்விக்கப்பட்டது