பக்கம்:சிலம்பொலி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. சிலம்பொவி

விட்டது கோவலன் மனம். 5. இதை மாதவியிடம் கோவலன் குறிப்பாகச் சுட்டியிருக்கலாம்; கோவலன் செல்வம் இழந்த நிலையை மாதவியும் எண்ணியிருத்தல் வேண்டும் என்ற முடிவுகளைக் கொண்டுள்ளார் எனத் தெரிகிறது.

"குளிப்பதற்கும் கொள்ளைப் பொன்! அணிவதற்கும் ஆயிரம் ஆயிரம்! அம்மம்ம! செலவினை எப்படிக் கணக் கிடுவது?” (பக்கம்: 4) எனக் கேட்பதன் மூலம், கோவலன் பொருள் அழிவிற்குக் காரணம், மாதவியின் குளியலும், கோலங்கோடலுமே எனக் கொண்டுள்ளார் தெ.பொ.மீ. எனத் தெரிகிறது.

'அணிவதற்கும் ஆயிரம் ஆயிரம்' என்பதற்குச் சான்றாக, மாதவி கோவலனோடு கலந்து கொண்ட கடைசி இந்திர விழாவின் போது, ஊரெல்லாம் காண அவள் ஆடியதனால் கொண்ட பொறாமையால் வந்துற்ற வெறுப்பு காரணமாக, ஊடல் கோலமோடு இருந்த கோவலனுக்குக் கூடலும், ஊடலும் அளித்து மகிழ்விப்பதற்கு முன்னர் க் குளித்துக் கோலங்கொண்ட தைக் கூறும்,

"ஊடற்கோலமோடு இருந்தோன் உவப்பப் பத்துத் துவரினும், ஐந்து விரையினும், முப்பத்து இருவகை ஓமாலிகையினும், ஊறின நன்னீர், உரைத்த நெய்வாசம், நாறிருங்கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையிற் புலத்திய பூமென் கூந்தலை வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி, நலத்தகு மெல் விரல்கல்லணி செlஇப், பரிய கம், நூபுரம், பாடகம், சதங்கை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/44&oldid=560667" இலிருந்து மீள்விக்கப்பட்டது