பக்கம்:சிலம்பொலி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 39

அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து குறங்கு செறி திரள் குறங்கினில் செறித்து, பிறங்கிய முத்தரை முப்பத்திருகாழ் நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇக் காமர்கண்டிகை தன்னொடு பின்னிய து மணித்தோள்வளை தோளுக்கு அணிந்து, மத்தக மணியொடு வயிரம் கட்டிய சித்திரச் சூடகம் செம்பொற்கைவளை பரியகம் வால்வளை பவழப்பல்வளை அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து, வாளைப்பகுவாய் வணக்குறு மோதிரம் கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் வாங்குவில் வயிரத்து மரகதத்தாள் செறி

காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து, சங்கிலி நுண் தொடர் பூண்ஞாண், புனைவினை அங்கழுத்து அகவையின் ஆரமொடு அணிந்து, கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி

செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு, இந்திர நீலத்து இடையிடைதிரண்ட சந்திரபாணி, தகைபெறு கடிப்பினை

அங்காது அகவையின் அழகுற அணிந்து, தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம், புல்லகம் தொடர்ந்த தலைக்கணி மையிர் ஒதிக்கு மாண்புற அணிந்து, -

கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்"

-கடலாடு காதை : 75-110

இவ்வரிகளைக் காட்டியுள்ளார். இவ்வரிகளைச் சான்று. காட்டியதன் மூலம், அவ்வரிகளில் கூறப்பட்டிருக்கும் கால் விரல் மோதிரம் முதல், புல்லகமாம் தலைக்கணி வரையான முப்பதுக்கும் மேற்பட்ட அணி வகைகளில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/45&oldid=560668" இலிருந்து மீள்விக்கப்பட்டது